02 September 2009

வீடு குடி புகுதல் - சடங்குகள் உண்டா?


From: Dalba Date: 2009/7/10
To: fromgn@googlegroups.com


அஸ்ஸலமு அலைக்கும் ....
 
வீடு கட்டியோ வாங்கியோ குடி புகும் பொது பல விதமான அனாட்சாரங்கள் இன்றும் நடக்கின்றன.
இஸ்லாமிய முறையில் வீடு குடி போகும் பொது என்னென்ன செய்ய வேண்டும்.
 
விபரமறிந்தவர்கள் விளக்கவும்
 
வஸ்ஸலாம்
 
----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2009/8/31
To: fromgn@googlegroups.com


வீடு குடி போவதற்கென்று எந்த சடங்கும் இஸ்லாத்தில் இல்லை. வீட்டை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தி "இறைவனின் பெயரால்.." உள்ளே நுழைய வேண்டியதுதான்.
 
வீடு கட்டி குடி போவதென்பது ஒரு மன நிறைவான மகிழ்சிகரமான காரியமாகும். இப்படி ஒரு மன நிறைவையும் மகிழ்சியையும் கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்ட முஸ்லிம்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எப்படியும் ஏதாவது சடங்கு செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். அந்த சடங்குகளின் வரிசையை தான் பாத்திஹா ஓதுவது பால் காய்ச்சுவது என்று தொடர்கின்றது
 
நம் பெண்கள் பால் காய்ச்சுவதற்கு ஒரு தத்துவம் வேறு சொல்வார்கள். புது வீட்டில் பால் காய்ச்சி குடி புகுந்தால் பால் பொங்குவது போன்று செல்வம் பொங்குமாம் (பொங்கல் கொண்டாடி குடி புகுகிறார்கள் என்பது புரிகிறதா...) சரி அதையாவது உருப்படியாக செய்கிறார்களா என்றால் இல்லை. பால் பொங்கி வரும் போது அதன் தலையில் தண்ணீரை தெளித்து பொங்குவதை (பொங்கலை)அடக்கி விடுகிறார்கள். (இந்த வீட்டில் மகிழ்சிப் பொங்கி அடங்கி விடட்டும் என்பது இதன் அர்த்தமோ..)
 
என்னவோ எந்த வீட்டிலும் பால் காய்ச்சப்படாத மாதிரியும் புது வீடுகளில் மட்டும் தான் அது நடப்பது போன்றும் புது வீடுகளில் மட்டும் தான் பால் பொங்குவது போன்றும் (பழைய வீடுகளில் காய்ச்சப்படும் பாலெல்லாம் பொங்காதா) அர்த்தமற்ற நம்பிக்கையை வளர்த்து வைத்துள்ளார்கள். டீ கடைகளில் ஒரு நாளைக்கு பலமுறை பால் பொங்குகிறது பல ஆண்டுகளாக எத்துனையோ டீ கடைகள் டீ கடைகளாகவே இருப்பதைப் பார்த்து வருகிறோம்.
 
எனவே வீடு குடி போக பால் காய்ச்சுவது என்பது இஸ்லாத்தில் இல்லாத அறிவுக்குப் பொருந்தாத காரியமாகும் அதனால் அதை தவிர்க்க வேண்டும். இத்தகைய சடங்கை சார்ந்ததுதான் பாத்திஹா ஓதுவதும்.
 
எத்துனையோ மக்கள் வீடில்லாமல் பிளாட்பாரங்களில் வாழ்க்கையை ஓட்டும் போது, சொந்த வீட்டுக் கான ஏக்கங்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் வாடகை கட்டிடங்களில் குடி இருக்கும்  போது சொந்தமாக வீடு கட்டி குடி போகுபவர்கள் இறைவனுக்கு நிறைய நன்றிச் சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள்.
 
'இறைவன் உங்களுக்கு உங்கள் வீடுகளில் மன அமைதியையும் ஓய்வையும் ஏற்படுத்தியுள்ளான்' (அல் குர்ஆன் 16:80)
 
'உங்கள் வீடுகளில் மன அமைதி' என்ற வார்த்தையில் உங்கள் வீடு என்பது நிச்சயம் சொந்த வீட்டை குறிப்பதாகவே இருக்கும். சொந்த வீட்டில் கிடைக்கும் மன அமைதி வேறு எங்கும் கிடைக்காது என்பதை நாமெல்லாம் அனுபவப் பூர்வமாக வாழ்க்கையில் உணர்கிறோம்.  அப்படிப்பட்ட அமைதியை இறைவன் சொந்த இல்லங்களில் ஏற்படுத்திக் கொடுப்பதால் சொந்த வீடைப் பெற்றவர்கள் அவனுக்கு நிறைய நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளார்கள்.
 
அந்த நன்றி என்பது பால் காய்ச்சுவதிலும் பாத்திஹா ஓதுவதிலும் இல்லை. மூட சடங்குகள் அது சார்ந்த நம்பிக்கைகள் எல்லாவற்றையும் துடைத்தெறிந்து பெண்கள் ஐவேளையும் தொழும் இல்லமாக, தினமும் இறை வேதம் ஓதப்படும் இல்லமாக, எந்த நேரமும் இறைவனை நினைவுக் கூறக்கூடிய இல்லமாக, பிறருக்கு இறைவனின் நினைவை ஊட்டக் கூடிய இல்லமாக நம் இல்லங்கள் மாறுவதுதான் அவனுக்கு நன்றி செலுத்துவதற்குறிய சரியான அடையாளங்களாகும்.
 
வீடு குடிப்போவதற்கென்று இஸ்லாத்தில் எந்த ஒரு விஷேஷ நிகழ்சியும் இல்லை.  பிஸ்மில்லாஹ் சொல்லி உடன் வருபவர்களுடன் ஸலாமை (சாந்தி வாழ்த்தை) பரிமாறிக் கொண்டு நுழைந்து விட வேண்டியது தான்.
கடன்பட வேண்டி இல்லாமல் மேலதிகமாக வசதி வாய்ப்புகள் இருந்தால் சொந்த வீட்டு மகிழ்சியை பிறருடன் பகிர்ந்துக் கொள்வதற்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம்.
 
விருந்துக்கு அழைப்பு விடலாம் என அனுமதிக்கும் ஹதீஸ். (அதோடு இந்த ஹதீஸிலிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய மேலதிக விளக்கத்தையும் கொடுத்துள்ளோம்)
 
(எனக்கும், ஏனைய நபிமார்களுக்கும் உள்ள உவமையாவது செல்வந்தன் ஒருவன் ஒருமாளிகையை எழுப்பி முழுமைப்படுத்தினான் ஒரு செங்கல் இடத்தைத் தவிர, அதை அழகுற அமைத்தான். அந்த வீட்டில் விருந்துக்கு நுழைந்த மக்கள் அதன் அழகையும், கலையுணர்வையும் கண்டு அதிசயித்தார்கள். ஒரு செங்கல் மட்டும் குறையுள்ளதே அதுவும் இருந்தால் முழுமைப் பெற்றிருக்குமே.. எனக்கூறினார்கள். அந்தக்கல் நான்தான்;. (என்மூலமாக அல்லாஹ் அந்த வீட்டை- இஸ்லாத்தை-முழமைப்படுத்தி விட்டான்). அபுஹூரைரா, ஜாபிர் பின் அப்தல்லாஹ், உபை, ஆகியதோழர்கள் அறிவிக்கும் இந்நபிமொழி புகாரி, முஸ்லிம், திர்மிதி ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.
 
நபி(ஸல்)தம்முடைய வருகையை நபிமார்களின் முடிவுரையை - இப்படி உவமையாக கூறியுள்ளார்கள். நபித்துவ முழுமைக்காக இந்த உவமைக் கூறப்பட்டாலும் இங்கு சொல்லப்பட்ட வார்த்தைகளை ஆழ்ந்து சிந்திக்கும் போது நிறைய படிப்பினைகள் இருக்கின்றன. நபி(ஸல்)அவர்கள் மக்காவில் தம் பிரச்சாரத்தை துவங்கும்போது அந்த பாலைவனம் வரண்டு கிடந்தது என்னவோ உண்மைதான், இருந்தாலும் அங்கு வாழ்ந்த மக்களிடம் மூடநம்பிக்கைகள் மிக செழுமையாக தழைத் தோங்கி வளர்ந்திருந்தன. குலம், மொழி, இருப்பிடம், உடற்கூறுகள் என்று அறியாமை வாதங்கள் இருந்ததுபோலவே அவர்களின் 'ஆன்மீக பாதை' முழுதும் மூட முட்கள் பரப்பப்பட்டிருந்தன. வான வெளியில் நடக்கும் யதார்த்த நிகழ்வுகளுக்கெல்லாம் மூட காரணங்கள் கற்பித்தார்கள். புகாரி, முஸ்லிம், நஸயி, திர்மிதி போன்ற வரலாற்று நபிவழி நூல்களில், எம்மக்களை நபி(ஸல்) திருத்தினார்களோ அம்மக்களின் பழைய நிலைப்பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மக்களிடம்தான் நபி(ஸல்) இஸ்லாத்தை அதன் பழமையான - பகுத்தறிவு எழுச்சிமிக்க - வடிவில் போதித்தார்கள். குர்ஆனுடைய வாதங்களும் நபி (ஸல்) அவர்களுடைய சொல்வீச்சும்,அம் மக்களிடம் இருந்த கலப்படமான ஆன்மீக நம்பிக்கைகளையும், ஏற்றிபோற்றப்பட்ட மூட வாதங்களையும் தவிடுபொடியாக்கின. கணக்கிலடங்கா மிகப்பெரிய செல்வந்தனான அல்லாஹ் கட்டிய பெரும் இந்த இஸ்லாமிய மாளிகையை நோக்கி அதன் அழைப்பாளராக ஏவப்பட்ட நபி(ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று அந்த இல்லத்தில் நுழைந்தவர்கள் அங்குள்ள வசதி வாய்ப்பையும், கலையழகையும் கண்டு வாய்பிளந்து வியந்துதான் போனார்கள். இந்த வியப்பின் தாக்கம் இத்தாலியையும், பாரசீகத்தையும், இந்தியாவையும் கூட குறுகிய காலத்தில் எட்டியது. மக்காவில் அஸ்திவாரம் போடப்பட்ட இந்த இஸ்லாமிய வீட்டின் வசதி அன்றைய உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் உலகலாவிய அளவிற்கு அந்த வீடு விஸ்தீரணபடுத்தப்பட்டது.

வீட்டின் அவசியத்தை உணராத, அது தேவையில்லை என்று சொல்லக்கூடிய ஒரே ஒரு மனிதரைக்கூட நாம் உலகில் பார்க்க முடியாது. 
செல்லுலர், இன்டர்நெட் என்று உலக பொருளாதார பெருக்கு சாதனங்களை கையில் வைத்துக்கொண்டு பணம் பண்ணும் பில்லியனர்கள் முதல் அன்றாட காய்ச்சிகள் வரை எல்லோருக்கும் மிக அவசிய தேவை வீடு. 'எவ்வளவு தான் நாம் போகுமிடங்களில் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் திரும்பியதும்நம், நம்வீட்டில் கிடைக்கக்கூடிய அமைதியும், சுகமும் வேறெங்கே இருக்கு..' என்ற அந்த உள்ளப்பூர்வமான வார்த்தைகள் - அவர்கள் வாழ்வது குடிசை வீடாக இருந்தாலும்-வீட்டின் அவசியத்தை உணர்த்துகிறது. மனித வாழ்க்கையிலிருந்து தவிர்க்க முடியாத வாழ்வாதார இடமாகிய வீட்டை, தாம்போதித்த வாழ்வாதார கொள்கைக்கு நபி(ஸல்) உதாரணமாக கூறுகிறார்கள்.

மழை, வெய்யில், புயல், பனி, கடும்காற்று என்று இயற்கை சீற்றங்களிலிருந்து வீடு மனிதனை எப்படி பாதுகாக்கிறதோ அதேபோன்று ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, ஜாதிஇழிவு, பாலியல்கொடுமைகள், மானபறிப்பு,
போன்ற மனித விரோத சீற்றங்களிலிருந்து ஒருவன் - ஒருவள் பாதுகாப்புப் பெறவேண்டுமானால் இஸ்லாமிய வீட்டில் குடியேறுவதைத்தவிர, இஸ்லாத்தை தம் சொந்த வீடாக்கிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
இந்த வீட்டுடைய ஒளி அமைப்பை பற்றி நபி(ஸல்)அவர்கள் விளக்கும் போது 'நான் வெள்ளை வெளேர் என்ற நிலையில் இந்த மார்க்கத்தை விட்டு செல்கிறேன்.இதன் இரவுகூட பகலைப்போன்றது..'  (நூல்,முஸ்லிம்) என்று கூறியுள்ளார்கள்.
 
நபி(ஸல்)அவர்களின் விருந்தழைப்பை ஏற்று அன்று இந்த வீட்டில் நுழைந்தவர்கள் உலகை, அதன் மக்களை புதிய புத்துணர்ச்சியுடன் உருவாக்கமுடிந்தது. மனிதன் மீது மனிதன் செலுத்தும் ஆளமைகளெல்லாம் அறுத்தெறியப்பட்டு மனிதனை விட கீழான படைப்புகளெல்லாம் அவனை ஆட்டிப்படைத்த அடிமைத்தலைகள் கிழித்தெறியப்பட்டு புதியதோர் உலகைப்படைக்க முடிந்தது.
மாறாத, மங்காத அதே ஒளி வெள்ளத்தில் மிதக்கும் அந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாடும் இன்றைய மக்கள் - முஸ்லிம்களின்- நிலைபரிதாபம்.
 
இஸ்லாம் எவ்வளவு ஒளிமயமாக இருந்தும் அதில் குடியேறியவர்கள் குருடர்களாகி போய்விட்டதால் இவர்களின் வாழ்க்கை இருண்டு கிடக்கிறது. இதயத்தில் இருளை பரவவிட்டு இந்த இல்லத்திற்கு பேய் இல்லம் என்று பெயர் சூட்டுகிறார்கள். இஸ்லாத்தில் பேய்கள் உண்டாம், ஆவிகளின் அராஜகம் உண்டாம், மாய மந்திர சடங்குகள் இந்த வீட்டுக்கு தேவையாம், தன்னிகரற்ற ஓரிறை சக்தியிடம் மட்டும் சரணாகதி அடைவது போதவில்லையாம், ஆயிரம் இறை சக்தியாளர்கள் உண்டாம், அவர்களை திருப்திப்படுத்த கூடு, கொடி, உரூஸ், நாட்டியம், ஆடல், பாடல், தட்சணை என்று தின பூஜை செய்யவேண்டுமாம், இந்த வீட்டில் வாழ்வதற்குவசதி போதவில்லையாம், கட்டுமான பணிகளில் குறையுள்ளதாம், பிற்காலத்தில் வந்த கட்டிட வல்லுனர்கள்தான் இந்த வீட்டை டெவலப் செய்தார்களாம்
என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், இந்த வீட்டின் அடிப்படையை உணராமல் உளறிக் கொட்டக்கூடியவர்களாகத் தான் இன்றைய இந்த வீட்டுக்கு சொந்தக்கார முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

நெஞ்சில் நிறைந்த முஸ்லிம் சகோதர.சகோதரிகளே.. இப்படித்தான் இஸ்லாத்தை விளங்குவதா?
  • நீங்கள் மிக நவீனமாக, கலையுணர்வுடன் ஒரு வீடு கட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மக்களை விருந்திற்கு அழைத்து அங்கேயே குடி அமர்த்துகிறீர்கள். உங்களிடம் விருந்துண்ட மக்கள் உங்கள் வீட்டை 'பேய் வீடு' என்கிறார்கள். இதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா?
அல்லாஹ் கட்டிய இஸ்லாமிய வீட்டில் பேய், பிசாசு உண்டு என்கிறீர்களே.. இது அல்லாஹ்வை குறைப்படுத்தியதாகாதா..?
  • உங்கள் வீட்டில் குடியேறியவர்கள் இந்த வீட்டின் மாடல் சரியில்லை என்கிறார்கள், 'ஆமாம், அப்படித்தான்' என்பீர்களா..? இறைவன் வகுத்த சட்டங்களால் மாடல் செய்யப்பட்ட இஸ்லாமிய வீட்டில், அந்த சட்டம் சரியில்லை, இந்த சட்டம் சரியில்லை என்று குறைக்கூறுகிறீர்களே!
மனதால் வெறுக்கிறீர்களே..இதுநியாயமா?
  • உங்கள் வீட்டில் வசிப்பவர்கள் 'இது என்ன வீடு.. அறைக்கதவு எங்கென்று தெரியவில்லை, கூடத்திற்கு வழி எங்கே புரியவில்லை, பின் தோட்டத்திற்கு எப்படி செல்வது, சமையலறைக்கு வழி எங்கே.. எல்லாம் குழப்பமாக இருக்கு...' என்கிறார்கள். உடனே நீங்கள் 'சரியாகத்தான் சொன்னீங்க, வழிகளை புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு என் வீடு குழப்பம்தான்..' என்று ஆதரிப்பீர்களா?
 இறைவன் வகுத்த இஸ்லாமிய வீட்டில் அந்த வழி புரியவில்லை, இந்த வழி தெரியவில்லை என்கிறீர்களே.. முறையா?
  • எல்லா வசதிகளுமிக்க உங்கள் வீட்டில் வாழ வந்தவர்கள் 'எங்களுக்கு வசதி போதவில்லை, இதை இடிக்கவேண்டும், அதை உடைக்க வேண்டும், புதிதாக கட்ட வேண்டும்.' என்கிறார்கள். உங்கள் அனுமதியில்லாமல் மாற்றமும் செய்கிறார்கள். மௌனமாக இதை பொருத்துக் கொள்வீர்களா?
இஸ்லாமிய வீட்டில் இறைவன் வகுத்த வணக்க வழிபாடுகள் போதாதென்று (கடமையாக்கப்பட்ட வணக்கங்களையே முறையாக நிறைவேற்றுவதில்லை என்பது தான் உண்மை) நபி(ஸல்) கற்றுத்தராத புதிய, புதிய வணக்கங்களை உருவாக்குகிறீர்களே.. இது இறைவனுக்கு எதிரான போக்கல்லவா?

மீண்டும் ஒரு முறை ஆரம்ப ஹதீஸை படித்து சிந்தியுங்கள். அந்த எழில்மிகு வீட்டில் நம் கைகளால் மாற்றங்கள் செய்ய மனம் வருமா..? பிறர் செய்தால் அதை ஏற்றுக்கொள்ள மனம் வருமா..? அந்த வீட்டில் அன்று குடியேறியவர்கள் அப்பழுக்கில்லாமல் அதை பாதுகாத்ததால்தான் அந்த வீடு அவர்களை உலகின் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. அதே வீட்டில் நாமும் இன்று வசிக்கிறோம்,ஆனால் நமது நிலை..?

அறிவுப்பூர்வமாக இஸ்லாத்தை விளங்கி வாழும் முஸ்லிம்களான நம் வாழ்க்கையை மாற்றுவோம்;.

இஸ்லாத்தை நமது செயல்பாட்டின் மூலமாகவும்,பிரசாரத்தின் மூலமாகவும் பிறருக்கு எடுத்து சொல்ல தயாராகுவோம்.

இறைவன்மீது நம்பிக்கை வைத்து,இறைவனுக்கு பயந்து,இறைவனையே சார்ந்து நின்று, இறைவனுக்காகவே வாழ்வோம்.

இறைவன் பெரும் பாதுகாவலன்,பெரும் கொடையாளன் என்பதை நினைவில் நிறுத்துவோம்.
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com   

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe   


----------
From: Dalba Date: 2009/9/1
To: fromgn@googlegroups.com


அஸ்ஸலாமு அலைக்கும்
விளக்கமளித்தமைக்கு மிக்க நன்றி

----------
From: hameed maricar Date: 2009/9/1
To: fromgn@googlegroups.com


அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக  

27 August 2009

நோன்பு சலுகையளிக்கப்பட்டவர்கள்


From: Hyder Hussain Date: 2009/8/27
To: fromgn@googlegroups.com


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு நோற்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என பயந்தால், கர்ப்பிணி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த (விடுபட்ட) நோன்பை  திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்ர்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் அதற்கு பகரமாக   ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: முஸ்லிம்.)
 
 என்னுடைய கேள்வி:
மேலே குறிபிட்டுள்ள ஹதிஸில், கர்ப்பிணி பெண்களுக்கும், முதியவர்களுக்கும் கொடுக்கப்பட்டுலுள்ள பரிகாரம், நோன்பின்  அனன்றைய தினத்திலே கொடுத்துவிட/ (நிறைவேற்றிட)  வேண்டுமா? அல்லது மறுநாளோ அல்லது அடுத்தடுத்த நாளிலோ? அல்லது நோன்பு பெருநாள் முடிந்து 30 நாளின் உணவை ஒரே நாளில் பகிர்ந்தளிக்கலாமா?
 
அறிந்தவர்கள் ஆதாரத்துடன் விளக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
 
ஹைதர் சென்னை.

----------
From: நமக்குள் இஸ்லாம்
Date: 2009/8/27
To: fromgn@googlegroups.com


ஸலாம்.
 
நீங்கள் ஹதீஸ் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ள வாசகங்கள் (கர்ப்பிணி பெண்கள் பற்றிய வாசகங்கள்) முஸ்லிமில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக கொள்ளவும்.
 
உங்கள் சந்தேகத்துடன் சேர்த்து "சலுகையளிக்கப்பட்டவர்கள்" பற்றிய தெளிவை கீழே விரிவாக கொடுத்துள்ளோம். (மேற்கொண்டு சந்தேகம் இருந்தால் எழுதவும்)
 
சலுகையளிக்கப்பட்டவர்கள்.

மனித பலவீனங்களை கருத்தில் கொண்டு இறைவன் இஸ்லாமிய வரையறைகளில் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளான். நோன்பும் சிலருக்கு சலுகையளிக்கின்றது.

1)நோயாளிகள்.

நோன்பு நாட்களில் ஒருவர் நோய்வாய்படுகிறார். அது தலைவலியோ, காய்ச்சலோ, அல்லது வயிற்றுக் கோளாறுகளோ அல்லது இன்ன பிற எதோ ஒரு நோய். இந்த நோயின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள் இந்த நோயால் நோன்பு வைக்க முடியாது அல்லது நோன்பு வைத்தால் நோயின் பாதிப்பு அதிகமாகும் என்று கருதுபவர்கள் நோயின் போது நோன்பு வைக்காமல் ரமளானுக்கு பிறகு நோயிலிருந்து குணமடைந்தவுடன் விடுபட்ட அனைத்து நோன்பையும் நோற்றுவிட வேண்டும்.

ஏமாறுவது நாமே!

இறைவன் பொதுவாக நோயாளி என்று தான் குறிப்பிடுகிறான். இன்ன இன்ன நோய்க்கு சலுகை என்று குர்ஆனிலோ சுன்னாவிலோ பட்டியல் எதுவும் இல்லை. எனவே தலைவலியிலிருந்து மரணப்படுக்கை வரையுள்ள அனைத்து நோயையும் இது உள்ளடக்கவே செய்யும். இந்த நோய், அந்த நோய் என்று வரையறைப் போடும் உரிமை எவருக்கும் இல்லை என்றாலும் முஸ்லிம்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

சாதாரணமாகவே நோன்பு வைக்கும் முதல் நாளில் சிலர் தலைவலிக்கு ஆட்படலாம். நோன்பு திறக்கும் பொழுதுகளில் அனைவருக்குமே ஒரு வித மயக்கம் ஏற்படும். பட்டினி இருக்கும் பொழுதுகளில் வயிற்றில் புரட்டல் போன்ற உணர்வுகள் ஏற்படவே செய்யும். இதையெல்லாம் நோய் என்ற பட்டியலில் கொண்டு வந்து 'தான் நோயாளி' என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டு நோன்பு வைக்காமல் இருப்பது அறிவுடமையாகாது. அப்படி செய்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும். தலைவலி, மயக்கம் போன்ற நோய்கள் சில மணித் துளிகளில் மறைந்து விடக் கூடியதாகும். அதை காரணங்காட்டி நோன்பை முறித்துக் கொள்வது, அல்லது நோன்பு வைக்காமலிருப்பது நம்மீது நோன்பு என்ற கடனை அதிகப்படுத்தி விடும். தவிர்க்க முடியாத நிலை இருந்தால் மட்டுமே நோன்பை விட வேண்டும். பின் வரும் நாட்களில் நோற்கலாம்.

தொடர் நோய்.

முதுமை ஒரு தொடர் நோய். முதுமைக்கு ஆட்பட்டு விட்டவர்கள் மீண்டும் இளமைக்கு திரும்ப முடியாது என்பதால் நோன்பு வைப்பதை கடினமாக கருதும் முதுமையைப் பெற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருப்பது அவர்களின் பலவீனத்தை அதிகப்படுத்தி விடும் என்பதால் இவர்கள் நோன்பிலிருந்து விலக்குப் பெறுகிறார்கள். முதுமையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது 'அறிவு பெற்று வாழ்ந்தும் பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்மூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்' என்று குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 22:5) இத்தகையவர்கள் மீது நோன்பு கடமையில்லை.

தொடர் நோய்க்குட்பட்ட இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

எயிட்ஸ் நோயாளிகள், எயிட்ஸ் தாக்கப்பட்ட எவரும் மரணத்தின் நாட்களை எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். தனது தவறான போக்கால் இந்த நோயைப் பெற்றுக் கொண்டாலும் இவர்கள் நோன்பிலிருந்து விலக்கு பெற முடியாது. ஏனெனில் நோன்பு வைத்தால் என்ன பலவீனம் ஏற்படுமோ அந்த பலவீனம் எயிட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படாது. எனவே எயிட்ஸ் என்பது ஒரு தொடர் நோய் என்ற பொதுவான நிலையை வைத்துக் கொண்டு இவர்கள் நோன்பு வைக்காமல் இருக்க முடியாது. இவர்கள் அவசியம் நோன்புவைத்தாக வேண்டும்.

கோமா நிலைக்குத் தள்ளப்பட்டவர்களும் தொடர் நோயாளியாகக் கருதப்படுவார்கள். அவர்கள் முழு அளவு நோன்பிலிருந்து விதிவிலக்கு பெறுபவர்களல்ல. மீண்டும் தன் நிலைக்கு திரும்பினால் அவர்கள் மீது பழைய நோன்பு கடமையாகும்.

அல்சர் நோயின் தாக்கத்தைப் பெற்றவர்கள் இறை நினைவு மிக்க ஒரு முஸ்லிம் மருத்தவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது நலம்.

பிரயாணிகளுக்கு சலுகை.

நோயாளிகளைப் போன்று பிரயாணிகளுக்கு உடல் நிலை பாதிப்பு இல்லை என்றாலும் பிரயாணிகள் வேறுபல பிரச்சனைகளை சந்திப்பதால் இஸ்லாம் பிரயாணிகள் குறித்து பல கருத்துக்களை முன் வைத்துள்ளது. அதிலொன்றுதான் பிரயாணிகள் நோன்பை விடலாம் என்ற சலுகை.

அன்றைய பிரயாணம் - இன்றைய பிரயாணம்.

பிரயாணத்தைப் பொருத்தவரை மனிதன் பெருமளவு முன்னேற்றத்தைப் பெற்று வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டாலும் பிரயாணத்தில் ஏற்படும் களைப்பையும் வழியில் பல பிரச்சனைகளையும் சந்திக்கவே செய்கிறான். அன்றைக்கு ஒட்டகம், குதிரை, கழுதை போன்ற மிருகங்களை தங்கள் பிரயாண வாகனமாக அனைவரும் பயன்படுத்தினார்கள். இன்றைக்கும் அந்த மிருகங்கள் உலகில் பல நாடுகளில் பிரயாணத்திற்கு பயன்படவே செய்கின்றது.

பிரயாணம் செய்யும் வாகனங்களையெல்லாம் சிலர் கருத்தில் எடுத்துக் கொண்டு இன்றைய பிரயாணங்கள் பிரயாணங்களே அல்ல. மனிதன்; வீட்டில் இருக்கும் போது எப்படி இருக்கின்றானோ அதே நிலையை பிரயாணத்திலும் பெற்று விட்டான் என்றெல்லாம் விளக்கமளித்து இன்றைக்கு எந்த பிரயாணியும் நோன்பிலிருந்து சலுகைப் பெற முடியாது என்றெல்லாம் கூறுகிறார்கள். மேலைநாடுகளில் வசித்துக் கொண்டு ஏசி கார்களை கையில் வைத்துக் கொண்டு பிரயாணம் செய்பவர்களை பார்ப்பவர்கள் மட்டுமே இத்தகைய கருத்தை முன் வைக்க முடியும். (இருந்தாலும் அவர்களை பிரயாணி என்று சொல்லக் கூடாது என்ற கருத்து தவறாகும்).

இதில் பிரயாணம் செய்யும் வாகனங்களையெல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பிரயாணியை தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு துணை ஆதாரங்கள் கூட ஒன்றும் கிடைக்கவில்லை. இன்றைக்கு விரைவு வாகனங்கள் இருப்பது போன்று அன்றைக்கு குதிரைகள் பயன்பட்டன. எனவே சொந்த ஊரிலிருந்து வெளியில் கிளம்பும் அனைவரும் பிரயாணியாகவே கருதப்படுவர்.

பிரயாணத்தில் இருப்பவர்கள் நோன்பு வைப்பது சிரமம் என்று கருதினால் அவர்கள் பிரயாணத்தின் போது நோன்பை விட்டு விட்டு பிரயாணம் இல்லாத மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்று விட வேண்டும். சிலர் தினந்தோரும் பிரயாணம் செய்பவர்களாக இருப்பார்கள். உதாரணமாக வெளியூர் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், தொழிலுக்காக வெளியூர் செல்பவர்கள் இவர்கள் தினந்தோரும் பிரயாணம் செய்பவர்களாக இருப்பதால் தொடர்;ச்சியாக நோன்பிலிருந்து விலக்கு பெறுவார்களா.. என்று சிலர் நினைக்கலாம். நிரந்தர நோயாளிகளைப் போன்று நிரந்தர பிரயாணி என்று எவருமில்லை. எனவே பிரயாணிகள் பிற நாட்களில் நோன்பை நோற்க வேண்டிய நிலையிலுள்ளவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தினந்தோரும் பிரயாணத்தை காரணங்காட்டி இவர்கள் நோன்பை விட்டால் வரும் நாட்களில் இவர்கள் நோன்பை நோற்க முடியாமல் போய்விடும் நிலை ஏற்படும். ஏனெனில் ரமளானுக்கு பிறகும் இவர்களின் தின பிரயாணம் தொடரவே செய்யும்.

நோன்பு காலங்களிலேயே நோன்பை வைத்து விடுவதுதான் இவர்களைப் போன்றவர்களுக்கு இலகுவாகும். ஏனெனில் கடமையான மாதம் என்ற எண்ணத்தில் பொழுது கழியும். பிற மதத்தவர்களும் இது முஸ்லிம்களுக்கு நோன்பு மாதம் என்று தெரிவதால் அலுவல்களில் முஸ்லிம்களுக்கு வேலையில் உதவி புரிவார்கள். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கும். ரமளான் கழிந்து நோன்பு வைப்பவர்கள் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதால் அவர்கள் நோன்பு வைத்து விடுவதுதான் சிறந்தது.

நபி(ஸல்) பிரயாணத்தின் போது நோன்போடு இருந்தும், நோன்பை விட்டும் வழிகாட்டியுள்ளார்கள். எனினும் உலகில் உள்ள அனைவரையும் விட அவர்கள் இறைவனை அதிகம் அஞ்சியதால் விடுபட்ட நோன்புகளை நோற்க மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டு அந்தக் கடமையை நிறைவேற்றினார்கள். இன்றைக்கு நோன்பு என்ற சூழ்நிலை நிலவும் போதே நோன்பு வைப்பது சிரமம் என்று கருதுபவர்கள் பிற நாட்களில் அதை தவறவிட்டு விடும் அபாயம் உள்ளதால் அந்தக் கடமையை அதற்குரிய நாட்களில் நிறைவேற்றி விடுவதுதான் நல்லது.

நோன்பும் - பெண்களும்


நோயாளிகள் - பிரயாணிகள் என்ற பொது சலுகையில் அந்த நிலையைப் பெற்ற பெண்களும் அடங்குவார்கள் என்றாலும் பெண்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு இன்னும் சிலரும் சலுகைப் பெறுகிறார்கள்.

மாதவிலக்கு.

பெண்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவீனத்தை ஏற்படுத்தும் நாட்கள் மாவிலக்கு நாட்கள். எனவே அந்த சந்தர்பங்களில் அவர்கள் கூடுதல் பலவீனத்தை அடைந்து விடக் கூடாது என்பதால் மாதவிலக்கு நாட்களில் நோன்பு வைப்பதிலிருந்து இஸ்லாம் சலுகையளித்துள்ளது.

நாங்கள் மாதவிலக்கு நாட்களில் தொழுகையையும் நோன்பையும் விட்டுவிடுமாறும் பிற நாட்களில் நோன்பை மட்டும் நோற்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம் என நம்பிக்கையாளர்களின் தாயார் ஆய்ஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)

மாதவிலக்கிற்கான விளக்கங்கள்.

சாராசரியாக குறிப்பிட்ட நாட்களில் மாதவிடாய் ஏற்படும் பெண்கள் மாதவிடாய் ஏற்படும் நேரத்தை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அன்றைய தினம் முன் கூட்டியே நோன்பை விட்டு விடலாம். உதாரணமாக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மாதவிலக்கு ஏற்படும் பெண் நோன்பு மாதத்திலும் அதே நாளில் இன்றைக்கு மாதவிலக்கு ஏற்படும் என்று தெளிவாக தெரிந்தால் நோன்பு வைக்கமால் இருந்து விடலாம். ஆனால் அன்றைய தினம் நோன்பு முடிந்த பிறகுதான் மாதவிலக்கு ஏற்படும் (உதாரணமாக இரவு 7மணிக்கு) என்று தெரிந்தால் அத்தகைய பெண்கள் அன்றைய தினம் நோன்பை வைத்து விட வேண்டும்.

மாதவிலக்கு நாட்களில் கோளாறு உள்ளப் பெண்கள் மாதவிடாய் ஏற்படும் வரை நோன்பை விடக் கூடாது. உதாரணமாக இன்றைக்கு அல்லது நாளைக்கு மாதவிடாய் ஏற்படலாம் என்று நம்பும் பெண்கள் அந்த சந்தேகத்திற்காக நோன்பை விட்டு விடக் கூடாது. இன்றைக்கு ஏற்படலாம் என்று எண்ணி நோன்பை விட்டு விட்டு அன்றைக்கு மாதவிலக்கு ஏற்படவில்லை என்றால் அந்த நோன்பு களாவாகி விடும். எனவே இத்தகைய பெண்கள் நோன்பை தொடர்ந்து விட வேண்டும். இத்தகைய நிலையில் உள்ள பெண் நோன்பு வைத்துள்ளார் அன்றைய பொழுது மாதவிலக்கு வந்து விடுகிறது என்றால் தானாகவே நோன்பு முறிந்து விடும். பிறகு அதை களா செய்ய வேண்டும். இந்த மாதவிலக்கு நோன்பு திறப்பதற்கு முன் எந்த நேரத்தில் ஏற்பட்டாலும் (நோன்பு முடிய 5 நிமிடங்களே உள்ள நிலையில் மாதவிலக்கு ஏற்பட்டாலும்) நோன்பு முறிந்து விடும். அதை களா செய்ய வேண்டும்.

தொடர் இரத்தப் போக்கு.

சிலர் அபூர்வமாக இந் நிலைக்கு ஆட்படுவார்கள். அதை மாவிடாய் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. தொடர் இரத்தப் போக்கு என்பது ஒரு நரம்பு நோயின் தன்மையாகும். இந்த நிலையை அடைந்தவர்கள் தொழுகையையோ, நோன்பையோ விட்டு விட அனுமதியில்லை.

தொடர் இரத்தப் போக்கு ஏற்பட்ட பாத்திமா பின்த் கைஸ் என்ற நபித்தோழிக்கு இறைவனின் தூதர் தொழுகையிலிருந்து விலக்கு அளிக்கவில்லை. குளித்து விட்டு தொழுமாறு வழிகாட்டியுள்ளார்கள். வழக்கமாக மாதவிடாய் ஏற்படும் நாட்களை கணக்கிட்டு அந்த நாட்களில் தொழுகையை விட்டு விடுமாறு பணிந்துள்ளார்கள்.

தொடர் உதிரப் போக்கு ஏற்படும் பெண்கள் அந்த நோயால் பலவீனம் அடையவில்லை என்றால் அவர்கள் நோன்பு நோற்க வேண்டும். இரத்தம் வெளியேறுவதை கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒருவேளை இந்த தொடர் உதிரப் போக்கு தாங்க முடியாத பலவீனத்தை கொடுக்கின்றதென்றால் அத்தகையப் பெண்கள் 'தொடர் நோயாளி'யாகக் கருதப்படுவார்கள். அவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்.

மாதவிடாய் ஏற்பட்டப் பெண்கள் நோன்பை விட்டு விட்டு பிறகு களா செய்ய வேண்டும் என்பதற்கு நேரடியாக ஹதீஸ் இருப்பதுப் போன்று கர்ப்பிணி - பாலூட்டும் பெண்கள் நோன்பை களா செய்யலாம் என்பதற்கு நாம் தேடி பார்த்த வரை எந்த ஒரு ஹதீஸூம் கிடைக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: இன்னல்லாஹ அஸ்ஸவஜல்ல வழஅ அனில் முஸாபிரி அஸ்ஸவ்ம வஷத்றஸ் ஸலாத்த வஅனில் ஹூப்லா வல்முர்ளிஇ அஸ்ஸவ்ம.  அல்லாஹூ கர்பிணித் தாய்கும் பாலூட்டும் தாய்கும் நோன்பை அகற்றி விட்டான் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ் விலக்களித்துள்ளான் என்பது நிரந்தரமானதா.. தற்காலிகமானதா.. என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களை பொருத்தவரை அவர்கள் சூழ்நிலையை அணுசரித்தே முடிவெடுக்க வேண்டும் என்பதே நமக்கு சரியாகப்படுகின்றது.

அல்லாஹ் நோயாளிகளுக்கும் பிரயாணிகளுக்கும் சலுகையளித்துள்ளான். கர்ப்பிணி பெண்களும் சலுகைப் பெருகிறார்கள் என்று நபி(ஸல்) விளக்கியுள்ளார்கள். நோயாளிகளிலும், பிரயாணிகளிலும் தற்காலிக சலுகையும் நிரந்தர சலுகையும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இந்த பெண்கள் யாரோடு ஒத்துப் போவர்கள் என்பதை பார்ப்போம்.

பிரயாணிகளின் நிலையும் கர்ப்பிணிப் பெண்களின் நிலையும் வெவ்வேறானவை என்று நாம் சிந்தித்தால் நோயாளிகளைப் பற்றி பேசும் வசனம் இவர்களுடன் ஒத்துத்தான் போகும்.

உங்களில் எவரேனும் பிரயாணத்திலோ அல்லது நோயாளியாகவோ இருந்தால் அவர் வேறு நாட்களில் நோற்றுவிடவும். (அல் குர்ஆன் 2:184,185)

நோயாளிகளும் - கர்ப்பிணிகளும்.

நோயளிகளுக்கு நோன்பு தேவையில்லை என்று சொல்வதற்கு நியாயம் இருந்தும் இறைவன் அவர்களுக்கு நிரந்தர விலக்களிக்கவில்லை. நோயிலிருந்து விடுபட்டவுடன் நோற்க வேண்டும் என்று கூறி விட்டான். நோயாளிகளுக்கே இதுதான் நிலவரம் என்றால் கற்பிணிகளுக்கோ - பாலூட்டுபவர்களுக்கோ முழுவதுமாக விலக்களித்திருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் கர்ப்பிணி - பாலூட்டுபவளை விட நோயாளிகளே அதிக சிரமத்திற்குள்ளாகுபவர்கள். நோன்பிலிருந்து முழுதும் விலக்களிக்க தகுதியுள்ளவர்கள் இவர்கள் தான். இவர்களையே இறைவன் பின் வரும் நாட்களில் நோன்பை பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்லியுள்ளதால் இந்த வசனத்திற்கு முரண்படாமல் அந்த ஹதீஸை விளங்குவதுதான் பொருத்தமானதாகும்.

தொடர் நோயாளிகளும் - தொடர் கர்ப்பிணிகளும்.

நோயாளிகள் பின்வரும் நாட்களில் நோன்பை நோற்கலாம் என்றால் அவர்கள் நோயிலிருந்து விடுதலைப் பெற வேண்டும். சுகம் பெற முடியாத அளவிற்கு தொடர் நோயால் தாக்கப்பட்டவர்கள் (உதாரணமாக முதுமை - வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவற்றை சொல்லலாம்) ஒவ்வொரு நோன்புக்கு பகரமாகவும் ஒரு ஏழைக்கு உணவளித்து விடவேண்டும். இதை 2:184 வசனத்திலிருந்து விளங்கலாம்.

இதே நிலை கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஒத்துதான் போகும். எப்படி என்றால், கர்ப்பம் தரித்ததிலிருந்து குழந்தைப் பெற்றெடுத்து பாலூட்டி முடியும் வரை மூன்று வருடத்துடைய, குறைந்த பட்சம் இரண்டு வருடத்துடைய நோன்பு அவளுக்கு விடுபட்டுப் போய் விடும். அதன் பிறகு அவள் தொண்ணூரு நாட்கள் - குறைந்த பட்சம் அறுபது நாட்கள் நோன்பு நோற்க வேண்டி வரும். இதுவே அவளுக்கு சுமை என்றாலும் அந்த சந்தர்பத்தில் அவள் அடுத்த கர்ப்பம் தரித்து விட்டால் மீண்டும் இரண்டு மூன்று மாத நோன்புகள் கணக்கில் வந்து நின்று விடும். அவள் காலம் முழுதும் நோன்பு நோற்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். இஸ்லாத்தில் உள்ள எந்த ஒரு வணக்கமும் மனிதர்களை இப்படி தொடர் சிரமத்திற்கு உள்ளாக்குவது போன்று கடமையாக்கப்படவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த வெளிப்படையான விஷயம்.

தொடர் நோயாளிகளைப் போன்று தொடர் கர்ப்பம் பாலூட்டல் போன்ற கடமைகளால் சிரமப்படும் பெண்கள் நோன்பிற்கு பகரமாக ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளித்து விடலாம் என்பதே நமக்கு சரியாகப் படுகிறது. சிரமத்தை உணராத பெண்கள் - சிரமத்தை பொருட்படுத்தாத பெண்கள் நோன்பு நோற்பதைப் பற்றி ஆட்சேபனையில்லை.

2:185 வது வசனத்தில் வரும் 'இறைவன் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறான் அவன் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தவில்லை' என்ற சொற்சொடரை ஒன்றுக்கு பல முறை சிந்தித்தால் நம்முடைய கருத்து சரியானதுதான் என்பது தெளிவாகும்.

குழந்தைக்கு பாலூட்டக் கூடிய தாயிடம் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் 'நீ நோன்பு நோற்கும் சக்தி இல்லாதவள்தான் அதனால் ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவு கொடுத்து விடு' என்று கூறியுள்ளார்கள். (தாரகுத்னி - தப்ரி விரிவுரை)

எனவே கர்ப்பிணி - பாலூட்டும் பெண்கள் நோன்பை களா செய்து தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்த நம்மிடம் ஆதாரமில்லை (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

முடியாதவர்களுக்குப் பரிகாரம் என்ன?

சில சட்டங்களில் இஸ்லாம் சிலருக்கு சலுகையளிக்கின்றது. சலுகையையும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமானவர்கள் பரிகாரம் செய்யலாம் என்ற சட்டத்தையும் இஸ்லாம் முன் வைக்கின்றது.

மேற்கண்ட விளக்கங்களுக்கான ஆதார குர்ஆன் வசனத்தை இப்போது பார்ப்போம்.

எண்ணப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால், எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்து (நோன்பிருப்பதை சிரமமாகக் கருதினால் நோன்பை விட்டு விட்டு) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. (நோன்பு வைக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - (இருப்பினும்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும். (அல் குர்ஆன் 2:184).

1) நோன்பு கடமையாகும்

2) சில காரணங்களால் அந்த சந்தர்பங்களில் நோன்பிருக்க முடியாதவர்கள் அதை பின்னர் களா செய்ய வேண்டும்

3) நோன்பு வைக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். (ஒரு நோன்புக்கு பரிகாரமாக ஒரு எழைக்கு உணவு)

4) பரிகாரம் செய்பவர்கள் விரும்பினால் அதிகமாகவும் செய்யலாம்.

5) என்னத்தான் பரிகாரத்திற்கு இறைவன் வழிகாட்டினாலும் அவன் நோன்பு வைப்பதையே விரும்புகிறான்.

இந்த ஐந்து சட்டங்களும் இந்த வசனத்தில் பொதிந்துள்ளன.

நோன்பு வைக்க முடியாத முதியவர்கள், தொடர் நோயாளிகள் தினமும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். 'உணவு' என்றவுடன் உணவு சமைத்து ஏழையை அழைத்து வந்து உண்ணவைக்க வேண்டும் என்று நாம் விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இவர்கள் எந்த ஏழையை அழைக்கின்றார்களோ அந்த ஏழைகளும் நோன்பு வைத்தவர்களாக இருக்கும் வாய்ப்புள்ளது. எனவே உணவு என்பதை சமைக்காத உணவுப் பொருள் (உதாரணமாக அரிசி, காய்கரி வகைகள், மாமிச வகைகள்) மற்றும் அதற்கான பொருளாதாரம் என்றுதான் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லது இவர்களைப் போன்று நோன்பு வைக்க முடியாத நிலையில் உள்ள வசதி வாய்ப்பற்ற ஏழைகளுக்கு உணவளிக்கலாம்.

இறைவன், அவன் மார்க்கத்தை விளங்கிப் பின்பற்றி அவன் நேசத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தில் நம்மையும் ஆக்கி வைப்பானாக.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com   

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe   


24 August 2009

அல்லாஹ்விற்கு உருவம்?


from: yoosuf lebbe bishrullah Date: 2009/8/2
To: fromgn@googlegroups.com


அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என தவ்ஹீத் சகோதரர்கள் கூறுவதாக எதிர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது பற்றி விளக்கவும்.

From: நமக்குள் இஸ்லாம் Date: 2009/8/4
To: fromgn@googlegroups.com


ஸலாம்.
 
ஒன்றுமே இல்லாத சூனியத்தை இஸ்லாம் வணங்க சொல்லவில்லை. உருவமற்ற சூனியத்திற்கு சூனியம் என்றுதான் பெயர் கொடுக்க முடியுமே தவிர அதற்கு இறைவன் என்று பெயர் கொடுக்க முடியாது.

இஸ்லாமிய இறைக் கோட்பாடு வெறும் சூனியக் கோட்பாடல்ல. இறைவன் உருவமற்றவன் என்று குர்ஆனிலோ நபி வழிகளிலோ எங்கும் சொல்லப்படவே இல்லை. மாறாக இறைவனுக்கு உருவம் இருக்கிறது என்பதற்கு இரண்டிலும் ஆதாரங்கள் இருக்கின்றன.

இறைவன் அனைத்தையும் கேட்பவன், அனைத்தையும் பார்ப்பவன், சூழ்ந்து அறிகின்றவன், ஞானம் மிக்கவன், ஆற்றல் மிக்கவன், அடக்கியாள்பவன், இயக்குபவன், என்றென்றும் நிலைத்து இருப்பவன், இப்படியே இறைவனைப்பற்றி ஏராளமான வசனங்கள் குர்ஆன் நெடுகிலும் ஏராளமாக இருக்கின்றன. வெறும் சூனியத்தை ஒன்றுமில்லாதவற்றை இப்படியெல்லாம் சொல்ல முடியாது.

இறைவன் தன்னைப் பற்றி கூறும் வசனங்களில் இதற்குரிய ஆதாரங்களை கொடுக்கிறான்.

யூதர்கள் இறைவன் விஷயத்தில் எவ்வளவோ மாறுபாடுகளை செய்துக் கொண்டே இருந்தார்கள். இன்றைக்கும் செய்கிறார்கள். நபி-ஸல்-வாழ்ந்த காலத்தில் இறைவனை கஞ்சனாக யூதர்கள் சித்தரித்துப் பேசினார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இறைவன் ஒரு வசனத்தை இறக்கினான்.

وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللّهِ مَغْلُولَةٌ غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُواْ بِمَا قَالُواْ بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَاء وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُم مَّا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَانًا وَكُفْرًا وَأَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاء إِلَى يَوْمِ الْقِيَامَةِ كُلَّمَا أَوْقَدُواْ نَارًا لِّلْحَرْبِ أَطْفَأَهَا اللّهُ وَيَسْعَوْنَ فِي الأَرْضِ فَسَادًا وَاللّهُ لاَ يُحِبُّ الْمُفْسِدِينَ
'அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது - என்று யூதர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கைகள் தான் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். மேலும் அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. அவன் நாடியவாறெல்லாம் செலவு செய்கிறான்.' (அல் குர்ஆன் 5:64)

இறைவன் தனக்கு இருக்கைகள் இருப்பதை தெளிவாக இங்கு குறிப்பிடுகிறான்.

وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
எல்லாமும் அழிந்து விடும் உம் இறைவனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும் என்றும் இறைவன் கூறுகிறான் (அல் குர்ஆன் 55:27)


அவனுக்கு முகம் உண்டு என்பதற்கு இந்த வசனத்தில் தெளிவான சான்று உள்ளது.
 
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
إِلَى رَبِّهَا نَاظِرَةٌ

இப்படி அவனுக்கு உருவம் உண்டு என்பதால் மறுமையில் நல்லவர்களால் சிரித்த முகத்துடன் இறைவனைப் பார்க்க முடியும்.(அல் குர்ஆன் 75:22.23)

மேக மூட்டமில்லா பவுர்ணமி இரவில் தடையின்றி சந்திரனை காண்பதுப் போல் உங்கள் இறைவனை மறுமையில் நீங்கள் காண்பீர்கள் என்று நபி-ஸல்- கூறியுள்ளார்கள்.(புகாரி, முஸ்லிம்)

உங்கள் கேள்விக்கு இந்த அளவு பதில் போதும் என்றாலும் இது பற்றி யாரும் குழப்பவோ விஷம பிரச்சாரம் செய்யவோ இடம் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் மேலும் சில விபரங்களையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

தனக்கு உருவம் உண்டு என்று சொன்ன இறைவன் அந்த உருவத்தை மனிதர்கள் யாரும் கற்பனை செய்யக் கூடாது என்று தடுத்து விட்டான் .
அதாவது இறைவனின் கை இப்படி இருக்கும், இறைவனின் கால் இப்படி இருக்கும், அவனது முகம் இது போன்று இருக்கும் என்று நாம் பார்த்த கேட்ட உணர்ந்த கற்பனை செய்த எது ஒன்றையும் அவனுக்கு உதாரணமாக்கக் கூடாது.
 

فَلاَ تَضْرِبُواْ لِلّهِ الأَمْثَالَ إِنَّ اللّهَ يَعْلَمُ وَأَنتُمْ لاَ تَعْلَمُونَ
அவனுக்கு உதாரணம் கூறாதீர்கள் ( அல் குர்ஆன் 16:74 )

 
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ
அவனைப் போன்று எப் பொருளும் இல்லை (அல் குர்ஆன் 42:11)
 
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

அவனுக்கு நிகராக எது ஒன்றுமில்லை (அல் குர்ஆன் 112:4)

இறைவனின் படைப்பினங்களை அவனுக்கு மாடலாக்குவது பாவமான செயல் என்று இறைவன் கூறுவதால் அத்தகைய காரியங்களிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.
 
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com   

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe   

----------
From: Ansari Thameem Date: 2009/8/5
To: fromgn@googlegroups.com


பிஸ்மில்லாஹ்!
அனைவருக்கும் எனது ஸலாம் வ அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு! 

அல்லாஹு அக்பர்! மாஷா அல்லாஹ்! நல்ல விளக்கம்! அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியிலேயே செலுத்துவனாக! ஆமீன்!
 
மிகவும் அற்புதமான விளக்கம் புனிதத்திருக் குர்ஆன் வசனங்களுடன்
 
வஸ்ஸலாம்
தஞ்சை தமீம் அன்சாரி
 

06 August 2009

திருமணத்தில் குத்பா - உரை அவசியமா?


From: muslim Date: 2009/8/6
Subject: திருமண நிக்காஹ் நடக்கும் இடத்தில் குத்பா(பேருரை)
To: fromgn@googlegroups.com


கேள்வி:-

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான குழுமச் சகோதரர்களுக்கு

கேள்வி1. நபி(ஸல்) அவர்கள் திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா (உரை) நிகழ்த்தியுள்ளார்களா?

கேள்வி2. முதல் கேள்விக்கு ஆதாரம் இருந்தால், நபி(ஸல்) அவர்கள் எந்த நபித்தோழரின் திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா(உரை) நிகழ்த்தினார்கள்?

கேள்வி3. திருமண ஒப்பந்தத்தின் போது குத்பா உரை நிகழ்த்த வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தால் நிக்காஹ் நடக்கும் முன் குத்பா(உரை) நடத்த வேண்டுமா? அல்லது நிக்காஹ் நடந்து முடிந்த பின் குத்பா(உரை) நிகழ்த்த வேண்டுமா?

குறிப்பு: திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் மூலம் பதில் தரவும். தாங்கள் பதில் அளிக்கும் எல்லா தலைப்புகளின் கீழ் குறிப்பிடும் ஹதீஸ்களின் அறிப்பாளர் வரிசையையும் சேர்த்து பதிலளித்தால் அதன் தரத்தை பரீசீலனை செய்ய வசதியாக இருக்கும். அல்லது அரபி டெக்ஸ்டை பேஸ்ட் செய்துவிட்டால் கூட போதுமானது.

- சிராஜ் ஏர்வாடி

பதில்:- வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்

தொழுகையில் ஓதவேண்டிய தஷஹ்ஹுதையும் பிற தேவைகளின் பொழுது ஓதவேண்டிய தஷஹ்ஹுதையும் நபி (ஸல் அவர்கள் எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.

தொழுகையில் தஷஹ்ஹுத் ''அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலாவது வத்தையிபாது அஸ்ஸலாமு அலைக அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு'' என்றும்,

தேவைகளின் போது ''அல்ஹம்துலில்லாஹி நஸ்தயீனுஹு வநஸ்தஃபிருஹு வநவூது பில்லாஹி மின்ஷுருரி அன்புஸினா வஸய்யிஆதி அஃமாலினா, மன்யஹ்திஹில்லாஹுஃபலா முளில்ல லஹ், வமன்யுள்லில் ஃபலா ஹாதிய லஹ் வஅஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு'' என்றும் மேலும் மூன்று வசனங்களையும் ஓதுவார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) (நூல் - திர்மிதீ 1023 நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா)

மூன்று வசனங்கள் 3:102, 4:1, 33:70 ஆகியவை என்று ஸுஃப்யான் ஸவ்ரீ விளக்கமளிக்கிறார்கள்.

3:102 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்¢ மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.

4:1 மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்¢ அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.

33:70  ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

தொழுகையில் அத்தஹிய்யாத்தில் ஓதுவதன் பொருள்:

''எல்லாவித கண்ணியமும் தொழுகைகளும் நல்லறங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது ஸலாமும், இறையருளும், பரக்கத்தும் ஏற்படட்டுமாக. மேலும் எங்கள் மீதும் ஏனைய நல்லடியார்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டுமாக. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.''

பிற தேவைகளில் ஓதவேண்டிய தஷஹ்ஹுதின் பொருள்:

நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியது! அவனிடமே உதவி தேடுகிறோம், பாவமன்னிப்பு தேடுகிறோம். எங்கள் உள்ளங்களின் தீங்குகளை விட்டும், தீய செயல்களை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறோம்! எவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவனை வழிகெடுப்போர் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்தானோ அவனுக்கு நேர்வழி காட்டுவோன் இல்லை.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْثَرُ بْنُ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏
‏عَلَّمَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏التَّشَهُّدَ فِي الصَّلَاةِ وَالتَّشَهُّدَ فِي الْحَاجَةِ قَالَ ‏ ‏التَّشَهُّدُ فِي الصَّلَاةِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏عَبْدُهُ وَرَسُولُهُ وَالتَّشَهُّدُ فِي الْحَاجَةِ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا فَمَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏عَبْدُهُ وَرَسُولُهُ وَيَقْرَأُ ثَلَاثَ آيَاتٍ ‏

قَالَ ‏ ‏عَبْثَرٌ ‏ ‏فَفَسَّرَهُ لَنَا ‏ ‏سُفْيَانُ الثَّوْرِيُّ

 

திருமண நிகழ்வுகளில் மட்டுமின்றி, எல்லா நிகழ்ச்சிகளிலும் உரையாற்றும் மேற்கண்ட உறுதி மொழியை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். திருமணத்தின் போது இந்த குத்பாவைக் கண்டிப்பாக ஓதவேண்டும் என்று இல்லை! குத்பா நிகழ்த்தவில்லை என்றாலும் திருமணம் நிறைவேறிவிடும்.

''நான் நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் முத்தலிப் மகளார் உமாமாவை மணமுடித்துக் கேட்டேன். அவர்கள் குத்பா ஓதாமல் எனக்கு அவரை மணமுடித்து வைத்தார்கள்.'' அறிவிப்பவர் பனூ ஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த நபித்தோழர். (நூல் - அபூதாவூத் 1810

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَدَلُ بْنُ الْمُحَبَّرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْعَلَاءِ ‏ ‏ابْنَ أَخِي ‏ ‏شُعَيْبٍ الرَّازِيِّ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏رَجُلٍ ‏ ‏مِنْ ‏ ‏بَنِي سُلَيْمٍ ‏ ‏قَالَ ‏
‏خَطَبْتُ إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُمَامَةَ بِنْتَ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏فَأَنْكَحَنِي مِنْ غَيْرِ أَنْ ‏ ‏يَتَشَهَّدَ

திருமண ஒப்பந்தத்திற்கு குத்பா - உரை அவசியம் என்ற நிபந்தனை இல்லை. குத்பா நிகழ்த்தினாலும் இல்லையென்றாலும் மண ஒப்பந்தம் நிறைவேறும் என்பதால், திருமணத்திற்கு முன்போ, பின்னரோ வசதியைப் பொறுத்து குத்பாவை - உரையை நிகழ்த்திக்கொள்ளலாம்.
 
இது நபிவழிச் செய்திகளிலிருந்து விளங்கிய எமது தனிப்பட்டக் கருத்தாகும்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

அன்புடன், muslim

26 April 2009

தண்ணீர் இல்லையென்றால்..


From: hasan ibnu Date: 2009/4/17
To: fromgn@googlegroups.com


தயம்மும் ......... சில விளக்கங்கள் ஆதாரத்துடன் தேவை........தயமும் செய்ய இறைவன் சொன்ன சந்தர்பங்கள் எவை ..??/  பல மவ்லவிகள் (????)...,   புழுதி உள்ள மண்ணில்தான்  கைகளை அடித்து தயம்மும் செய்ய வேண்டும் என்று அடித்து சொல்லித் தந்துள்ளனர்...ஆனால் இதை விரிவாக சிந்தித்தால் , நடை முறை சாத்தியம் இல்லை என்பது தெரியும்..ஒரு நடை முறை சாத்தியம் இல்லாத ஒற்றை நிச்சயம் இறைவன் கட்டளையாக  மனிதர்களுக்கு ஒருக்காலும் சொல்ல மாட்டான்..இதை அனுபவித்தில் கண்டிருக்ககேன் ...தயமும் வசனங்கள்    மொழி பெயர்த்தது பிழையாக இருக்கும் என சந்தேகம் எனக்கு உள்ளது.. கீழ் வரும் கேள்விகளுக்கு பதில் தாருங்கள் , குர் ஆன் ஆதார ஹதீஸ் களுடன்..... , 

உ + ம 1.    தண்ணீர் முகத்தில் பயன்படுத்தேவே முடியாத வருத்தம் ...அதே நேரம் திடீர் என பயங்கர அடை மழை ...தொடர்ந்து வெள்ளம் ... புழுதியை விடுங்கள் , மண்ணே தெரியாதுள்ளது  வெள்ளத்தில் .. இப்படி பல முறை நடக்கிறது , நடந்துள்ளது ........இப்போது அவர் தொழ  தயம்மும் செய்வது எப்படி ???    

உ +  ம , 2.  வெளிநாட்டில்  பனிக்காலம் , சுமார் ஆறு மாதங்கள் , கடும் பனி தூள் தான் பூமியில் இருக்கும் .., ஜப்பானில் வடபகுதியில் இருந்ததால்  பனிக்குள்  தான் வாழ்க்கை , அத்துடன் அங்கு சுவர் கூட பலகை தான்  ......இந்த நிலையில்   எதில் தயம்மும் செய்வது /?/ ...

உ + ம .  3.   நாம்  துருவபிரதேசத்தில் உள்ள  முஸ்லிம்  எஸ்கிமோவர்களை எப்படி தயம்மும் செய்ய சொல்வது ??/.........

---------
From: Mohamed Abbas Date: 2009/4/19
To: fromgn@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்

சகோதரரே தயம்மும் என்பது ஒரு பகுதியில் தண்ணீர் இல்லாத போது அல்லது நோயாள் பதிக்கப்பட்டவர் ஒலு அல்லது குளிப்பை செய்யும் போது நிறைவேற்றும் போது தூய்மையான மண்ணை பயன் படுத்துவதாகும்.

நீங்கள் நோயாளிகளாவோ, அல்லது பயணத்திலோ இருந்து, மலம் ஜலம் கழித்தோ, அல்லது நீங்கள் தாம்பத்தியோ உறவு கொண்ட பின்போ, தண்ணிரை பெறாவிட்டால் சுத்தமான மண்ணை நாடுங்கள், (அம்மண்ணை கொண்டு)உங்களது முகத்தையும், உங்களது கைகளையும் தடவி கொள்ளுவும், நிச்சியமாக இறைவன் பிழைகளை பொறுப்பவனாகவும், பாவங்களை மன்னிப்பனாகவும் இருக்கிறான் (4:43)

எனக்கும் என் உம்மத்தினவர்களுக்கும் பூமியில் அனைத்துப் பகுதியும் தொழுமிடமாகவும், சுத்தம் செய்ய உபயோகிக்கும் சாதனமாகவும் ஆக்கப்படுள்ளது. என் உம்மத்தவர்களில் எவருக்கேனும் அவர் எங்கிருந்த போதிலும் தொழுகை நேரம் வந்துவிட்டால் அவருக்கு அங்கியே சுத்தம் செய்யும் சாதனம் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபீஉமாமா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் அஹ்மது


நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம் அப்போது மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்ம் அது சமயம்  ஒரு மனிதர் தொழாது ஒதுங்கி இருந்தார். உன்னை தொழுகையிலிருந்து தடுத்தது எது? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) நான் ஸ்கலிதமான நிலையில் இருக்கிறேன் என்றார், அதற்கு நபி(ஸல்) அவர்கள் மண்ணை பற்றி பிடித்து தயம்மம் செய்து கொள் அதுவே  உனக்கு போதுமானது என்றார்கள் என இம்ரான்பின் ஹீசைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் முஸ்லிம், புகாரி

தண்ணீர் பத்து ஆண்டுகள் வரை ஒரு மனிதனுக்கு கிடைக்கவிட்டாலும், நிச்சியமாக மண்ணே (அவருக்கு) சுத்தம் செய்யும் சாதனாமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் திர்மதி, நஸயி, அபூதாவுத், இப்னுமஜா

தண்ணீர் இருந்தும் நோயாளிகளாகவோ, அல்லது உடல் தீங்கு ஏற்படும் என்று இருந்தால் அவரும் தயம்மம் செய்து கொள்ளலாம்.

ஒரு பயணத்தில் நாங்கள் இருந்தோம், எங்களில் ஒரு மனிதருக்கு கல் பட்டதால், காயம் ஏற்பட்டு விட்டது. அந்நிலையில் அவருக்கு ஸ்லலிதம் ஏற்பட்டு விட்டது. தன்னுடன் இருந்தவரை பார்த்து, எனக்கு ஏதேனும் தயம்மும் செய்து கொள்ளும் சலுகை உண்டா? எனக் கேட்டார். அதற்கு தண்ணிரை உபயோகிக்க சக்தி இருக்க நீ தயம்மும் செய்ய நாங்கள் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்றனர். அவரும் வேறுவழியின்றி குளித்தார். குளித்ததின் காரணமாக இறந்துவிட்டார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம்வந்த போது இது விசயமாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.அப்போது அவர்கள் அவரை கொன்றுவிட்டனர். அல்லாஹ் அவர்களை கொன்றுவிடுவனாக அவர்களுக்கு தெரியவிட்டால் அவர்கள் கேட்க வேண்டமா? மடமை நீக்குவதற்கு நிவராணம் கேட்பதேயாம். அவருக்கு போது மான தெல்லாம் தயம்மும் செய்துவிட்டு அவரது காயத்தின் மீது ஒரு துணியை சுற்றி கொண்டு அதன் மீது தடவிக்கொண்டு உடலின் மற்ற  பகுதிகளை கழுவி கொள்ள வேண்டும் எனக் கூறினார்கள் என ஜாபர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் அபுதாவுத்,தாரகுத்னி,இப்னுமஜா

கடுங்குளிர் போது தயம்மும் செய்யும் முறை

கடுங்குளிர் நிறைந்த ஓர் இரவில் எனக்கு ஸ்கலிதம் ஏற்பட்டுவிட்டது அக்கடுங்குளிர் குளித்தால் என்னை நான் அழித்து கொள்வேனோ என நான் பயந்தேன் அந்நிலையில் அந்நிலையில் தயம்மும் செய்து கொண்டு எனது தோழர்களுக்கு சுப்ஹீ தொழுகையை நடத்தி கொடுத்தேன் அதன்பிறகு நபி(ஸல்) அம்ருவே! நீ ஜனாபத்து உடையவே இருக்க, உன் தோழர்களுக்கு தொழுகை நடத்தினீரா? எனக்கேட்டார்கள் அதற்கு அம்ருபின் அல ஆஸ்(ரலி) அவர்கள் உங்களை நீங்களே அழித்து கொள்ளாதீர்கள் நிச்சியமாக அல்லா அருள் செய்யக் கூடியவனாக இருக்கிறான்(4:49) என்ற இந்த கண்ணியமும் மகத்துவம் பொருந்திய அல்லாவின் கூற்றை நினைவுபடுத்திகொண்டு தயம்மும் செய்து தொழுது கொண்டேன் என நான் கூறினேன் அதை கேட்ட அல்லாவின் தூதர் நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு மவுனமாகிவிட்டனர் என்று அம்ருபின் அல ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்கள் நூல் அஹ்மத், அபுதாவுத், இப்னுஹிப்பான்,ஹாகிம்,தாரகுத்னி

(1) மற்றும் (3)

தண்ணீர் இல்லாத போது தான் அவருக்கு தயம்மும் அனுமதிக்கப்படுகிறது. அவர் குளிப்பு அல்லது ஒலு செய்பவராக இருந்தால் அதனால் அவர் தண்ணீர் இருந்தால் ஒலு மற்றும் குளிப்பை நிறைவேற்ற வேண்டும். நோயாளிகளாக இருந்தால் குளிர் பிரதேசத்தில் வீட்டில் இருக்கும் போது குளிப்பு கடமையானால் குளிர் பிரதேசத்தில் தண்ணீர் குழுமையாக இருந்தால் அதை விதுவிதுப்பாக சூடு செய்து பின்பு ஒலு செய்யலாம் அதற்கு வசதி இல்லை என்றால் சுத்தமான வீடு சுவற்றை அடித்து தயம்மும் செய்யலாம்.
 
நானும் நபி(ஸல்) அவர்களின் மனைவியான மைமூனாவின் அடிமை அப்துல்லாஹ் இப்னு யஸாரும் அபூ ஜுஹைம் இப்னு அல்ஹாரிது இப்னு அஸ்ஸிம்மத்தில் அன்ஸாரி(ரலி) அவர்களிடம் சென்றோம். எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் பீர்ஜமல் என்ற இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களை சந்தித்து ஸலாம் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் சென்று (அதில் கையை அடித்து) தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவிய பின்னர் அவரின் ஸலாத்திற்கு பதில் கூறினார்கள் என்று அபூ ஜுஹைம்(ரலி) கூறினார் என உமைர் என்பவர் அறிவித்தார்.(புகாரி)
எதையும் முளைக்க செய்யாத உப்பு தரையில்  தொழுவதும் அதில் தயம்மும் செய்வதும் ஆகுமானது என்று யஹ்ய இப்னு ஸயது கூறினார்கள்(புகாரி, மாலிக்(ரஹ்))
 
(2) சுவர் பலகையாக இருந்தால் அல்லது பயணத்தில் ஒலு அல்லது குளிப்பு கடமையாக இருந்தால்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்துத் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவிக் காண்பித்தார்கள்" என அம்மார்(ரலி) அறிவித்தார். (புகாரி)

தயம்மும் என்பது முகத்தில் தடவுவதற்காகவும் கைகளில் தடவுவதற்காகவும் ஒரு தடவை கைகளை தரையில் அடிப்பதாகும்" என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்" அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர்َ(ரலி) நுல்: அஹ்மத்

ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்? என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தங்களின் முகத்தையும் இரண்டு முன்கைகளையும் தடவிக் காண்பித்து இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்தது எனக் கூறிய சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா? என்று கேட்டார்கள்" என அப்துர்ரஹ்மான் அப்ஸா(ரலி) கூறினார். அத்துடன் 'ஷுஅபா' என்பவர் இரண்டு கைகளால் பூமியில் அடித்து அவற்றைத் தம் வாயின் பக்கம் நெருக்கி (ஊதிவிட்டு) பின்னர் தம் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவினார்" என்று குறிப்பிட்டார் எனக் குறிப்பிடப்படுகிறது(புகாரி)

மவ்லவிகள் யாரும் சுயமாக கற்று தரவில்லை, அல்லாஹ்வும், நபி(ஸல்) அவர்களும் அழகான முறையில் நமக்கு கற்று தந்து இருக்கின்றனர். மார்க்கம் மிகவும் எளிதானது.

எந்த ஒரு அத்மாவுக்கும் அது தாங்கி கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை(அல்குர்ஆன்)
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com

தமிழ் யுனிகோட் டவுன்லோட்
http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe

19 April 2009

நமக்குள் இஸ்லாம் மனிதன், ஜின், ஷைத்தான்


from: Abufawzeema Date: 2009/3/29
To: நமக்குள் இஸ்லாம் <fromgn@googlegroups.com>


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

முக்கியமான கேள்வி!

ஷைத்தான்கள் பற்றியது.

மனிதன், ஜின், ஷைத்தான் ஆகியவை மூன்று வேறுபட்ட படைப்பினங்களா?  ஷைத்தான் ஜின்னினத்திலும் மனித இனத்திலும் நின்றும் உள்ளவனா?  அல்லாஹ்வுக்கு மாறு செய்த "இபுலீஸ்" என்பவன் ஜின்னினத்தைச் சேர்ந்த்தவன். முன்றாவதொரு படைப்பாக ஷைத்தான்கள் படைக்கப்பட்டு இபுலீஸின் தலைமையில் அவர்கள் இயங்கச் செய்யப்படுகிறார்களா?

தெரிந்தவர்கள் குர்- ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்குங்கள். அல்லாஹ்
உங்களுக்கு ரஹ்மத் செய்வான்.

வஸ்ஸலாம்
----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2009/4/9
To: fromgn@googlegroups.com


ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
 
ஷெய்த்தான் - இப்லீஸ் என்பது ஜின் இனத்தை மூலமாகக் கொண்டதாகும். ஜின் இனத்தை சார்ந்து தனது செயல்களின் காரணங்களால் ஷெய்த்தான் மற்றும் இப்லீஸ் உட்பட பல பெயர்களை பெற்றுக் கொண்டது. 
 
كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ
இப்லீஸ் ஜின் இனத்தை சார்ந்தவனாக இருந்தான். தனது ரப்புவின் கட்டளையை மீறி விட்டான். (அல்குர்ஆன் 18:50)
 
ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டதாகும். அப்படிப் படைக்கப்பட்டதாலேயே ஷெய்த்தான் 'படைபால் உயர்ந்தவன்" என்று கர்வம் கொண்டான்.
 
قَالَ أَنَاْ خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ
நான் அவரை (ஆதமை) விட சிறந்தவன். நீ என்னை நெருப்பினால் படைத்தாய். (அல் குர்ஆன் 7:12)
 
ஷெய்த்தான் என்பது ஷ(த்)தன என்ற மூல சொல்லில் இருந்து பிறந்ததாகும்.   இதற்கு "தொலைவில் உள்ளது" என்று பொருள்.  அவன் தனது மாறுபாட்டின் காரணத்தால் எல்லா நன்மைகளையும் விட்டு தூரமாகிப் போய்விட்டதால் அந்தப் பெயர் வந்தது என்ற கூற்று ஏற்புடையதாகும்.
 
திருக்குர்ஆனில் ஷெய்த்தான் பற்றி எச்சரிக்கப்பட்ட இடங்களை நாம் நோக்கும் போது "நன்மையைவிட்டு தூரமாக்கப்படும் செயல்களே சுட்டிக் காட்டப்பட்டு வந்துள்ளன" என்பதை கவனிக்கும் போது அந்தப் பெயருக்கான காரணத்தை நம்மால் விளங்க முடிகின்றது.
 
 إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لاَ تَرَوْنَهُمْ
 
(ஷெய்தானாகிய) அவனும் அவனது வம்சாவழிகளும், கூட்டத்தாரும் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு. (அல்குர்ஆன் 7:27)
 
எல்லாவித நன்மையை விட்டும் தூரமாகிப் போன ஷைத்தான்களின் தந்தையாகத்தான் இப்லீஸ் இருந்துள்ளான் என்பதை இன்னொரு வசனத்திலிருந்து விளங்கலாம்.
 
ஷைத்தான்களைப் பற்றி தொடர்ச்சியாக எச்சரிக்கும் ரப்புல் ஆலமீன்,  ஆதமுக்கு கட்டுப்பட்டு நடக்காததை பற்றிக் கேட்கும் போது "இப்லீஸ்" என்று அழைத்தே கேட்கிறான்.
 
قَالَ يَا إِبْلِيسُ مَا لَكَ أَلاَّ تَكُونَ مَعَ السَّاجِدِينَ
 
இப்லீஸே! ஸஜ்தா செய்தவர்களுடன் நீ இணையாமல் இருந்ததின் காரணம் என்ன? என்று (இறைவன்) கேட்டான் (அல்குர்ஆன் 15:32)
 
இந்த இப்லீஸின் சேனைகளாக இயங்கும் ஷெய்த்தான்களே உலகில் பல பயங்கர விளைவுகளை - இறைநம்பிக்கையாளர்களுக்கு தொடர் தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  கடைசியில் அவர்கள் சேரும் இடம் நரகம்
 
وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
 
இப்லீஸின் சேனைகள் நரகத்தில் தள்ளப்படும். (அல்குர்ஆன் 26:95)
 
மனித மனங்களில் குழப்பதை ஏற்படுத்துவதும், கணவன் மனைவிகளுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி விளையாடுவதும்,  இணைவைப்பு என்ற பலதெய்வக் கொள்கையை, நம்பிக்கையை மனிதர்களிடம் ஆழமாக வேறூன்றச் செய்வதும் இப்லீஸ் மற்றும் அவனது படைபலமான ஷெய்த்தான்களின் பிரதான பணியாகும்.
 
தண்ணீரின் மீது இப்லீஸின் சிம்மாசனம் உள்ளது.  அவன் தினமும் பல திக்குகளிலும் தனது சேனையை அனுப்பி குழப்பம் விளைவிப்பான் அதில் அவனுக்கு மிக விருப்பமானது கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஊட்டுவதாகும் என்றெல்லாம் பல நபிமொழிகள் நமக்கு விளக்குகின்றன.
 
மனித மனங்களில் குழப்பங்களை விளைவிக்கும் அந்த பாரதூர செயலை செய்யக் கூடியவர்கள் மனிதர்களாக இருந்தாலும் அவர்களின் செயல்கள் ஷெய்த்தானிய செயலை ஒத்திருப்பதால் அவர்களையும் ஷெய்த்தான் என்று குர்ஆன் அடையாளப்படுத்துகின்றது.
 
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ
 
மனித மனங்களில் வீணான - வஸ்வஸான - எண்ணங்களை உருவாக்கும் ஷெய்த்தான்கள் ஜின்களிலும் மனிதர்களிலும் இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 114:6)
 
ஹாருத் - மாருத் என்ற இரு மனித ஷெய்த்தான்கள் மக்களிடம் சூனியத்தை பரப்பி குழப்பம் விளைவித்ததையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளலாம்.  (அல்குர்ஆன் 2:102)
 
(இறைவன் அனைத்தையும் நுணுக்கமாக அறிந்தவன் என்று நம்புகிறோம்)

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com

தமிழ் யுனிகோட் டவுன்லோட்
http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe

07 April 2009

அல்லாஹ் முஸ்லிம்களின் இறைவனா..!

அல்லாஹ் முஸ்லிம்களின் இறைவனா..!
 
வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவும் இல்லை' என்றக் கொள்கையை ஏற்று அதன் படி வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களின் தொகை உலகில் இருநூறு கோடிகளுக்கும் மேல். இந்தக் கொள்கையை மனதால் ஏற்று தன் நிலையை மாற்றிக் கொள்ளா விட்டாலும் இந்தக் கொள்கை சரியானதுதான் என்று கருதுபவர்களும் கோடிக்கணக்கில் உள்ளனர்.
 
'வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறெவரும், எதுவுமில்லை' என்ற கொள்கையை நாம் அரபு மொழியில் மொழிபெயர்த்தால் 'லா இலாஹ இல்லா அல்லாஹ்' என்று வரும். இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் 'முஸ்லிம்' என்று அடையாளப்படுத்தப்படுகிறார். முஸ்லிம் என்ற அரபு வார்த்தையை தமிழ்படுத்தினால் 'கட்டுப்பட்டவர்' என்று பொருள் வரும்.
 
இந்தக் கொள்கையாளர்கள் தங்கள் வணக்கங்களிலும், தங்கள் இறை நினைவுகளிலும், அந்தக் கொள்கையைப் பற்றிப் பேசும் போதும் அந்தக் கொள்கையின் அரபு வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். அந்த வார்த்தையில் 'அல்லாஹ்' என்ற பதம் வருவதால் அல்லாஹ் என்ற அந்தக் குறியீடு தனிக் கடவுளை குறிக்கும் ஒரு சொல் என்றும், முஸ்லிம்கள் தனிக் கடவுளை ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் பிறர் விளங்கிக் கொள்கின்றனர்.
 
பல்வேறு மொழிகள் வழக்கிலுள்ள ஒரு நாட்டில் அவர்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு மொழியின் வார்த்தை ஒரு சாரார் பயன்படுத்தப்படும் போது அது வேறுவிதமான உணர்வுகளை ஏற்படுத்தவே செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை.
 
கிறிஸ்த்தவர்கள் வணங்கும் இயேசுவைப் பொருத்தவரை மொழிக்கு ஏற்றார்போல அந்த வார்த்தை மாற்றப்பட்டு புழக்கத்திற்கு வந்து விட்டது. ஆங்கிலத்தில் ஜீஸஸ் என்றும், அரபுவில் ஈஸா என்றும், தமிழில் இயேசு என்றும் இடத்திற்கு தகுந்தார்போல அவரது பெயர் மாற்றப்பட்டு விட்டதால் கிறிஸ்த்தவர்கள் இயேசுவென்று தமிழில் குறிப்பிடும் போது பிறர் அதை பளிச்சென்று புரிந்துக் கொள்கிறார்கள். முஸ்லிம்களைப் பொருத்தவரை அவ்வாறு எல்லா சந்தர்பங்களிலும் அல்லாஹ் என்பதை மொழியாக்கம் செய்வதில்லை. (இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன) அல்லாஹ் என்றே குறிப்பிடுவதால் அல்லாஹ் என்பது ஒரு இணத்தின், ஒரு கொள்கையின் கடவுளை குறிக்கும் சொல் என்ற நிலையைப் பெற்று விட்டது.
 
இது வருந்தத்தக்க ஒன்றுதான், ஏனெனில் ஒரு மொழியில் பலவீனம் அல்லது மொழி இடைவெளிகளின் காரணத்தால் மிகப் பெரிய ஒரு பொதுக் கொள்கை தவறாக புரியப்படுவது வருந்தத்தக்கதுதான். இந்த தவறான புரிதல் அக்கறையுள்ள முஸ்லிம்களின் மீது கூடுதலான விளக்கும் சுமையை? ஏற்படுத்தியுள்ளது.
 
'மிகப் பெரியக் கொள்கை' அலட்சியப்படுத்தாமல் பரிசீலியுங்கள்.
 
'அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது வேர் சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும்.
 
இந்த வரலாற்றை விளங்கிய யாரும் அல்லாஹ் என்பது இஸ்லாமிய கடவுளுக்குரிய ஆடையாளமல்ல என்பதை புரிந்துக் கொள்வர். ஏனெனில் இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.
 
பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெற செய்தது. ''பலக் கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா.. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர். (அல் குர்ஆன் 38:5)''
 
இதுதான் உண்மையே தவிர பிறர் நினைத்துக் கொண்டிருப்பது போன்று இஸ்லாம் புதிதாக அல்லாஹ் என்று ஒரு இறைவனை உருவாக்கிக் கொடுக்கவில்லை.
 
புரிந்துக் கொள்வதற்காக ஒரு உதாரணம் கூறலாம். ஒருவேளை முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் அரபு தேசத்தில் இல்லாமல் தமிழகத்தில் - தமிழ் மொழியில் வெளிப்பட்டிருந்தால் இங்கு நிலவி வந்த பல இறைக் கொள்கையை சீர் திருத்தி ஒரே இறைவன் என்ற அந்த மாபெரும் சக்தியை புரிய வைத்து அதன் பக்கம் மக்களை மீட்டெடுத்திருப்பார். அப்போது அவரது கொள்கை அரபுவில் மொழி பெயர்க்கப்பட்டால் தமிழில் முஹம்மத் அவர்கள் யாரை இறைவன் என்று குறிப்பிட்டார்களோ அது அரபுவில் அல்லாஹ் என்று மொழி பெயர்க்கப்படும். இதிலிருந்து அல்லாஹ் என்பது தனிக் கடவுளை குறிக்கும் சொல் அல்ல மாறாக பொதுக் கடவுளை குறிக்கும் சொல் என்பதை விளங்கலாம்.
 
தமிழில் பிரம்மன், விஷ்னு, முருகன் என்று குறிப்பிடப்படும் அந்த சொற்களுக்கும், இறைவன், கடவுள் என்று குறிப்பிடப்படும் அந்த சொற்களுக்கும் உள்ள வித்தியாசத்தை எவரும் விளங்கலாம். முந்தைய சொற்கள் தனிப்பட்டதையும் பிந்தைய சொற்களான இறைவன், கடவுள் என்பது பொது சக்தியையும் குறிப்பதாக எப்படி விளங்கிக் கொள்கின்றோமோ அதைப் போன்று தான் அல்லாஹ் என்பதும் எல்லோருக்கும் பொதுவான அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய ஒரு போது இறைவனைக் குறிக்கும் ஒரு அரபு சொல்லாகும். அதனால் தான் பொதுக்கடவுளை ஏற்றுக் கொண்ட அரபு மொழி பேசக் கூடிய யூதர்கள், கிறிஸ்த்தவர்கள் கூட இறைவனை அல்லாஹ் என்றே குறிப்பிடுகிறார்கள்.
 
இஸ்லாம் எந்த ஒரு தனிக் கடவுள் கொள்கையையும் வகுக்கவில்லை மாறாக அது எடுத்தக் காட்டுவது பொதுக் கடவுள் கொள்கைதான் என்பதை சந்தேகமற விளங்க வேண்டும். பின்னர் சற்று அது கூறும் அந்தக் கொள்கையின் உள்ளே நுழையுங்கள்.
 
பகுத்தறிவே உலக புரட்சியின், வளர்ச்சியின் அடையாளம் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை. படிப்பும், சிந்தனையும், அனுபவமும் பகுத்தறிவை தூய்மைப்படுத்தி மனிதனை விசாலமாக்குகின்றது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள தனது பகுத்தறிவை முழு வீச்சில் பயன்படுத்தும் மனிதன் தனது கடவுள் கொள்கைக்கு மட்டும் அதைப் பயன்படுத்தாமல் நம்பிக்கை என்ற பெயரில் பகுத்தறிவிலிருந்து விலகி நிற்பது விந்தையாக இருக்கின்றது.
 
சக்தியும் - வடிவமும்
 
பொதுவாக சக்தி அல்லது ஆற்றல் போன்றவற்றை வடிவப்படுத்தி மனிதன் அனுபவிப்பதில்லை. காற்று என்பது ஒரு ஆற்றல். அதை அனுபவிக்க காற்றுக்கு உருவம் வேண்டும் என்று எந்த மனிதனும் முடிவு செய்வதில்லை. ஒளி என்பது ஒரு சக்தி. ஒளிக்கு உருவம் வடிவம் கொடுத்தால் தான் அதை புரிந்துக் கொள்ள முடியும் அனுபவிக்க முடியும் என்று எந்த அறிவும் நம்பிக்கையும் கூறுவதில்லை. வெப்பம் என்பது கூட ஒரு சக்தி. அதை உருவப்படுத்தி அனுபவிக்க வேண்டும் என்று எந்த மனிதனும் சொல்லவில்லை. ஆனால் கடவுள் என்ற சக்தி அனுபவிக்க மனிதன் விரும்பியவாறெல்லாம் உருவப்படுத்திக் கொள்கிறான். பிற இறைக் கொள்கையில் உள்ள பலவீனங்களில் ஒன்று கடவுளை உருவப்படுத்துவது. (இறைவன் உருவமற்ற வெறும் சூனியம் அல்ல. இறைவன் அவனுக்கே உரிய உருவ அமைப்போடு இருக்கிறான். அவனது உருவத்தை யாரும் இதுவரை கண்டதில்லை என்பதால் இந்தப் பரம்பொருளை உருவப்படுத்தக் கூடாது என்று இஸ்லாம் சொல்கின்றது)
 
மனித கற்பனை, கடவுளை கொச்சைப்படுத்தலாமா..?
 
ஆன்றோர்கள் முதல் சான்றோர்கள் வரை எவருமே கடவுளை கண்களால் கண்டதில்லை என்பதால் தான் கடவுளாக கருதப்படும் வடிவங்கள் பெருத்த அவலங்களைப் பெற்றுள்ளன. கடவுளாக கருதப்படும் சிலைகளை பற்றி சிந்திக்கும் எந்த அறிவும் இது கடவுளை கொச்சைப்படுத்தும் போக்கு என்பதை விளங்கும்.
 
மனிதன் அவனுக்குத் தேவையானவற்றை மிக்க அழகுடன் வடிவமைக்கவே விரும்புகிறான். வீடு கட்ட விரும்பும் எந்த மனிதனும் கற்களை அடுக்கி கட்டி விட்டால் போதும் வீடாகி விடும் என்று முடிவு செய்வதில்லை. பொறியியளாளர்களின் ஆலோசனைப்படி வீட்டை அழகுற அமைக்கிறான். ஒரு ஓவியன் தனது ஓவியத்தை அசிங்கமாகவும் அவலட்ஷனமாகவும் வரைய விரும்புவதில்லை. புகைப்படக்காரர்கள் பார்த்தவுடன் முகம் சுலிக்கும் விதத்தில் அகோரமான புகைப்படங்கள் எடுப்பதில்லை. அவனது தேவைகளுக்காக அழகுணர்ச்சியை நாடும் மனிதன் கடவுளை கற்பனை செய்யும் போது மட்டும் எவ்வளவு கேவலமாக அதை வடிவமைத்துக் கொள்கிறான் என்பதை பார்க்கும் போது சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.
 
ஒன்றுக்கு மேற்பட்ட தலைகள், இரண்டுக்கும் மேற்பட்ட கரங்கள், மிருகங்களுக்குள்ள கோறப்பற்கள், யானைத்தலையும் பெருத்த தொப்பையும் கொண்ட உருவம். கருத்த, தடித்த நிறத்தில் பயங்கர உருவங்கள் என்று எத்துனை வித அகோரங்கள்!.
 
தனது குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கைகளுடன் குழந்தை பிறந்தால் கடவுளின் வடிவம் என்று அதை ஆபரேஷன் செய்யாமல் விட்டு விடுவார்களா..? கோரப் பற்களுடன் குழந்தைப் பிறந்தால் அதைக் கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவார்களா..? இறைவனாக கருதப்படும் உருவங்களுக்கு ஏன் இந்த அவலங்கள்!
 
மேல் தட்டு மக்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஒரு சாரார் வழிபடும் சிலைகளிடம் இத்தகைய அகோரங்கள் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். தாழ்ந்த மக்களாக அவர்கள் கருதுபவர்களின் சிலைகளின் வடிவங்கள் கூட தாழ்ந்தவைகளாகவே இருக்க வேண்டும் என்ற ஜாதிய வெறிப்பாடே இவற்றிற்கு காரணம்.
 
இறைவன்(அல்லாஹ்)வாகிய அவனுக்கு இந்த அவலட்சனங்கள் இல்லை.
 
தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலையா..?
 
கல்லை கடவுளாக உருவப்படுத்திக் கொள்பவர்கள் அதை நியாயப்படுத்த இப்படிக் கூறுவதைப் பார்க்கிறோம். சாதாரண நடைமுறைக்கு கூட சாத்தியமில்லாத தத்துவத்தை மகாப் பெரிய பொதுக் கடவுள் கொள்கைக்கு பொருத்திப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. அறிவாளிகளால் இதை எப்படி சரிகாணமுடியும் என்பதும் விளங்கவில்லை.
 
இந்தத் தத்துவத்தை சரிகாண்பவர்களின் வீட்டை ஒருவன் பார்த்து 'இது உன் வீடென்றால் உன் வீடு, என் வீடென்றால் என் வீடு' என்று கூறினால் மிக அழகான தத்துவம் அதனால் நீ விரும்பினால் இந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாடு' என்று சொல்வார்களா..? சிலைகள் என்றைக்கும் சிலைகளாகத்தான் இருக்கும் அவை ஒரு போதும் தன் நிலையிலிருந்து உயர்வுப் பெறாது. வேண்டுமானால் நாளடைவில் அது தனது புதிய பொலிவை இழக்கலாம் அதைத்தவிர வேறெந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. ஊனமான பல சிலைகள் ஆங்காங்கே கேட்பாரற்று கிடப்பதைக் கூட பார்க்க முடியும். வித விதமாக பல சிலைகளை வடிவமைத்து தூக்கி ஆடிபாடி கடலில் கரைத்து விட்டு கடவுளை கண்ணியப்படுத்தி விட்டதாக மகிழ்கிறார்கள். உண்மையான இறைவனை இப்படியெல்லாம் செய்ய முடியுமா...? அல்லாஹ் என்ற அந்த இறைக் கொள்கை இவற்றிர்க்கெல்லாம் அப்பாற்பட்டதாகும்.
 
சிந்தனையின் அடுத்தக்கட்டத்திற்கு நகருங்கள்.
 
ஏன் பல இறைவர்கள் வேண்டும்?எதற்காக, எந்த அடிப்படையில் இந்த மக்கள் பலக் கடவுள்களை நாடுகிறார்கள் அதற்கு என்ன அவசியம் என்பதும் பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகும்.
 
உயர்ந்த மனிதன்! தாழ்ந்தக் கடவுள்!!
 
திறமைமிக்க எந்த ஒரு மனிதனும் தன் திறமை தனித்துவத்துடன் வெளிப்படுவதையே விரும்புவான். தனது திறமையையும், உழைப்பையும், உலகம் மிகச் சரியாக கண்டுணர வேண்டுமானால் தாம் தனித்துவத்துடன் வெளிப்படவேண்டும் என்றே ஆசைப்படுவான். அப்படி வெளிப்பட்டவர்கள் தான் உலகில் மிளிர்கிறார்கள்.மிகச் சிறந்த, திறமைவாய்ந்த ஒரு கட்டிடப் பொறியாளர் தன்னுடைய திறமையால் ஒரு கட்டிடம் உயர்வதையே விரும்புவார். கூட்டு வைத்துக் கொண்டு தனது திட்டத்தை உருவாக்க மாட்டார். புகழ் மிக்க ஓவியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் யாராவது கூட்டாக ஓவியம் வரைந்து அந்தப் புகழை அடைந்தார்களா..? இப்படி நூற்றுக்கணக்கான உதாரணங்கள் கூறலாம். பலவீனங்கள் அடங்கிய மனிதனே ஒற்றையில், ஒற்றைப்பாட்டில் இத்துனை உயர்வுப் பெறும் போது பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் மட்டும் எப்படி ஒன்றுக்கு மேற்பட்டு இருக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இறைவனைக் கற்பனை செய்பவர்கள் மனிதனின் ஆற்றலை விட கடவுளின் ஆற்றல் குறைந்தது என்று எண்ணுகிறார்களா..?
 
சீர்மை சிதையும் என்பது உறுதி.
 
முழு உலகையும் நீங்கள் உங்கள் சிந்தனை திரையில் கொண்டு வந்து விரியுங்கள். எந்த நாட்டிலாவது சம அதிகாரம் பெற்ற இரண்டு ஜனாதிபதிகள், இரு பிரதமர்கள் இருக்கிறார்களா...! அரசுத் துறைகள் எதுவொன்றிலும் சம அதிகாரம் பெற்ற அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்டு பணியாற்றுகிறார்களா...? ஒன்றுக்கு மேற்பட்ட இறைவர்கள் இருந்தால் என்ன தவறு என்று கேட்பவர்கள். இந்தக் கேள்விகளையும் தங்களுக்குத் தாங்களே சற்றுக் கேட்டுப் பார்க்கட்டும். ஒரு நாட்டிற்கு இரு பிரதமர்கள், இரு ஜனாதிபதிகள் இருந்தால் என்னத் தவறு?பள்ளிக் கூடங்களுக்கு, கல்லூரிகளுக்கு இரு தலைமை ஆசிரியர்கள் இருந்தால் என்னத் தவறு? ஒரு வீட்டுக்கு இரு குடும்பத்தலைவர்கள் இருந்தால் என்னத்தவறு? இங்கெல்லாம் இருமை இருந்தால் என்னத் தவறு ஏற்படுமோ அதை விட பயங்கரம் இருக் கடவுள்கள் இருந்தால் ஏற்படும். இதை இறை வேதமாகிய குர்ஆன் இப்படிக் கூறுகிறது.வானங்கள், பூமி ஆகியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டுக் கடவுள்கள் இருந்திருந்தால் அவை சீர்கெட்டு சின்னாபின்னமாகி இருக்கும். இது மறுக்க முடியாத உண்மை. எதுவொன்றும் ஒரே சீராக இயங்கவேண்டுமானால் அது ஒரு அதிகாரத்திற்குட்பட்டிருக்க வேண்டும். நாடும் வீடும் சிறக்க ஒருமையே சரியானத் தீர்வு எனும் போது மொத்த உலகிற்கும் எப்படி ஒன்றுக்கு மேற்பட்டக் கடவுளைக் கற்பனைச் செய்கிறீர்கள்?
 
பலவீனங்களே கூட்டாச்சியைப் பற்றி சிந்திக்கும்.
 
ஒரு பெரியக் காரியத்தை சாதிக்க முற்படுபவர்கள் அதற்கான சக்தி தங்களுக்கு இல்லை என்றால் தங்களைப் போன்றவர்களை ஒருங்கிணைத்து அந்தக் காரியத்தை சாதிப்பார்கள். இன்றைக்கு நடக்கும் கூட்டாச்சிகளை இதற்கு உதாரணம் கூறலாம். ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை தங்களுக்கு இருந்தாலும் அதற்கான தகுதி தங்களிடம் இல்லை என்பதால் பிறரை நாடி கூட்டணி வைத்துக் கொண்டு நாடியதை சாதிக்கிறார்கள். (இந்தக் கூட்டணிகளில் பிரச்சனை உருவாகி முட்டி மோதிக் கொள்வது தனி விஷயம்)இப்போது சிந்தியுங்கள். இறைவர்களும் கூட்டாச்சி நடத்த வேண்டுமென்றால் இறைவர்களிடமும் மனித பலவீனங்கள் இருக்கின்றனவா..? இப்படி சிந்திப்பது கடவுளை பலவீனப்படுத்துவதாகாதா...? பலவீனத்திற்குட்பட்டவ(ர்)ன் எப்படி இறைவனாக இருக்க முடியும்? பல கடவுள் சித்தாந்தக்காரர்கள் நிதானமாக இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையான அந்தப் பரமசக்தி (அல்லாஹ்)க்கு எத்தகைய கூட்டு இறைவர்களும் தேவையில்லை. ஏனெனில் அவன் அனைத்து பலவீனங்களுக்கும் அப்பாற்பட்டவன்.
 
பல கடவுள்கள் - பல மனிதர்கள்.
 
ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் கலந்து ஒரு மனிதன் உருவாகின்றான். அந்த உருவாக்கம், கருவரையின் குடியிருப்பு, பிறக்கும் முறைகள், பால்யப் பருவம் என்று உலகில் பிறக்கும் கோடானக் கோடி குழந்தைகளும் ஒரே விதத்தில் பிறக்கும் போது பின்னர் ஜாதியம் என்ற கொடிய நோய் அந்தக் குழந்தையோடு வந்து ஒட்டிக் கொள்கின்றது. மிக சொர்ப்பமானவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள், அதிகமானவர்கள் தாழ்ந்தவர்களாகின்றார்கள். மனிதத்துவம் சிதைந்து ஏற்றத்தாழ்வு உருவாகி நிலைப் பெற்று விட்டது. இதற்கு என்னக் காரணம்? பலக் கடவுள் கொள்கையே இந்த ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி பலக் கடவுள் கொள்கையை கைக் கழுவுவதேயாகும்.
 
விண்ணுலகம், மண்ணுலகம் என்று அனைத்துலகத்திற்கும் ஒரே இறைவன் என்ற நிலை வரும் போதுதான் அவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சம அந்ததஸ்த்துள்ளவர்களாவார்கள். அதை மிக வலுவாக உலகில் நிலை நிறுத்திக் காட்டியது இஸ்லாம் ஒன்றுதான்.
 
மனித சகோதரர்களே.. கூண்டுகளிலும், முட்களிலும் சிறைப்பட்டு கிடக்கும் உங்கள் சிந்தனைச் சிறகுகளை அவற்றிலிருந்து விடுவித்து சற்று அகலமாக விரித்து பறக்க முயலுங்கள். அகன்ற வானவீதி அனைத்தையும் ஆளும் அந்த மகா இறைச் சக்தி உங்களுக்குப் புலப்படும். கடுகளவுக் கூட பலவீனமில்லாத அந்த மகா இறைச் சக்தியே உண்மையான இறைசக்தி.
 
அந்த இறைவன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியவனல்ல. அவனே அனைத்துலகுக்கும் சொந்தமானவன். அந்த மகா சக்தியை அரபுமொழியில் 'அல்லாஹ்' என்று குறிப்பிடுகிறோம். இறைவன் என்று குறிப்பிடுங்கள், கடவுள் என்று குறிப்பிடுங்கள் அதில் எந்தத் தடையும் இல்லை. மனிதக் குலம் விடுதலைப் பெற வேண்டுமானால் அந்த ஓரிறைக் கொள்கைக் குறித்து சிந்திப்பது ஒன்றே சரியான வழியாகும். இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் பக்கம் உங்களை அழைக்கின்றோம்

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

07 March 2009

பாங்கோசை

அஸ்ஸலாமு அலைக்கும்.
 
பல்வேறு நாடுகளில் ஒலிக்கும் தொழுகையின் அழைப்பு.  (அதான் - ஆடியோ)  அந்த அழைப்பின் ஓசை நம் காதுகளில் எத்துனை அற்புதமாக ஒலிக்கின்றது!. கேளுங்கள்.
 
 
 
 
 
5) பாங்கோசை - போஸ்னியாவிலிருந்து

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

03 March 2009

ஜின்கள் பற்றிய கேள்வி


From: hussain_71 Date: 2009/3/1
To: நமக்குள் இஸ்லாம் <fromgn@googlegroups.com>


அஸ்ஸலாமு அலைக்கும்

ஜின்கள் பற்றி விளக்கவும்?

----------
From: நமக்குள் இஸ்லாம் Date: 2009/3/3
To: fromgn@googlegroups.com

ஜின்கள் பற்றி நாம் விரிவாக அறிந்துக் கொள்வோம்.

ஜின்கள் என்று ஒரு படைப்பு இருப்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அந்த அளவிற்கு ஏராளமான சான்றுகள் அவைப் பற்றி உள்ளன.

எந்த நோக்கத்திற்காக மனிதர்கள் படைக்கப்பட்டார்களோ அதே நோக்கத்திற்காக தான் ஜின்களும் படைக்கப்பட்டுள்ளன.

மனிதர்களையும் - ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)

இந்த வசனத்தில் இடம் பெறும் வணக்கம் என்பதற்கு அவனுக்கு முழுதும் கட்டுப்பட்டு நடத்தல் என்பதே சரியான பொருள். இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருப் பொருளும் ஒவ்வொரு உயிரும் அவனை வணங்குகின்றன என்றாலும் வணங்கக் கூடிய இயல்பு இருந்தும் மாறு செய்யக் கூடிய மன நிலை இந்த இரண்டு படைப்புக்கும் இருப்பதால் பிரத்யேகமாக இந்த இரண்டு படைப்புகளை மட்டும் மேற்கண்ட வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மனிதர்களை இறைவன் படைக்கும் முன்பே ஜின் இனத்தை இறைவன் படைத்துவிட்டான். மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண் என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன்(இறைவன்) ஜின்களைப் படைத்தான். (அல்குர்ஆன் 55:15)

இந்த இனம் மனிதர்களுக்கு முன்பே பூமியில் வாழ்ந்ததா...என்றால் சிலர் அப்படிக் கூறினாலும் அதற்கு தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.  ஆதம் (அலை) படைக்கப்பட்டு அவருக்கு ஸூஜூது செய்ய இறைவன் கட்டளையிட்டபோது ஷெய்த்தான் மறுத்து ஆணவம் கொண்டான் என்பதை நாம் அறிவோம். இப்லீஸ் - ஷெய்த்தான் போன்ற பெயர்களால் குறிப்படப்படும் அந்த மனிதமகா எதிரிகள் தனி படைப்பல்ல அவைகளும் ஜின் இனத்தை சார்ந்தவைகள்தான்.

(இப்லிஸாகிய) அவன் ஜின் இனத்தை சேர்ந்தவனவான். (அல் குர்ஆன் 18:50)

ஆதமுக்கு ஏன் ஸஜ்தா செய்யவில்லை என்பதற்கு ஷெய்த்தான் எடுத்து வைத்த வாதம், தான் ஜின் இனத்தை சார்ந்தவன் என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.

'நான் உனக்கு கட்டளையிட்ட போது நீ ஆதமுக்கு ஸஜ்தா செய்யாமல் உன்னை தடுத்தது எது.. என்று இறைவன் கேட்க, நான் ஆதமைவிட மேலானவன் நீ என்னை நெருப்பினால் படைத்தாய். அவரை மண்ணினால் படைத்தாய் என்று கூறினான். (அல் குர்ஆன் 7:12)

நான் நெருப்பால் படைக்கப்பட்டவன் என்று ஷெய்த்தான் சொன்னதிலிருந்து ஷெய்த்தானியக் கூட்டம் முழுவதும் ஜின் இனத்தை சேர்ந்தவைதான் என்பது தெளிவாகின்றது.

இந்த ஜின் கூட்டம் முழுவதும் மலக்குகளுடன் இருந்துள்ளார்கள் என்ற விபரத்தை ஆதமுக்கு ஸூஜூது செய்யுங்கள் என்று கூறும் இறைவசனங்களிலிருந்து - சிந்திக்கும் போது - விளங்கலாம்.

மலக்குகளை நோக்கி நாம் சொன்னோம் ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள் என்று. (அல் குர்ஆன் 2:34 இன்னும் பல இடங்களில் இந்த சம்பவம் இடம் பெறுகிறது)

நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள் என்று நாம் சொன்னோம். (அல் குர்ஆன் 2:38)

'அனைவரும் இறங்கி விடுங்கள்' என்ற வார்த்தை மலக்குகளை விடுத்து மற்ற ஜின் இனத்திற்கும் ஆதம் - ஹவ்வா ஆகிய மனித இனத்தவர்களுக்கும் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.

இதுவரை நாம் கண்ட விபரத்தின் சுருக்கும் என்னவென்றால்

மனிதர்களுக்கு முன்பே ஜின் இனம் படைக்கப்பட்டு விட்டது

அவர்கள் மலக்குகளுடனே இருந்துள்ளார்கள்.

ஷெய்த்தான் - இப்லீஸ் போன்ற தீய சக்திகள் அனைத்தும் ஜின் இனத்தை சார்ந்தவையாகும்.

ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டதாகும்.

ஆதம் ஹவ்வா இருவருடனும் சேர்ந்து இவர்கள் பூமிக்கு இறங்குகிறார்கள்.

இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்துக் கொண்டும் இருக்கின்றன.

அவர்களுக்கும் இறைத்தூதர்கள் உள்ளனர்

(மறுமை நாளில் இறைவன் ஜின் - மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின் - மனித கூட்டத்தாரே!  உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா...என்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான். (அல் குர்ஆன் 6:30)

ஜின் கூட்டத்தாரே உங்களிலிருந்தே உங்களுக்கு தூதர் வந்துள்ளார் என்று இறைவன் கூறுவதிலிருந்து ஜின்களுக்கு ஜின் இனத்திலிருந்தே தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை விளங்கலாம். ஆனாலும் இவர்கள் மனித தூதர்கள் சிலரிடமும் அவர்கள் கொண்டுவந்த வேதத்திலும் பாடம் கற்றுள்ளார்கள்.

இவர்களுக்கு ஜின் இனத்திலிருந்து தூதர்கள் வந்தார்கள் என்பது முஹம்மத்(ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பு தான். முஹம்மத்(ஸல்) மனித குலத்திற்குறிய தூதராக மட்டுமில்லாமல் ஜின் இனத்திற்குறிய தூதராகவும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் கொண்டுவந்த குர்ஆன் மனித - ஜின் ஆகிய இரு இனங்களுக்கும் பொதுவானதாகும். 

இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் - வேதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதிலிருந்தே மனித சமூகம் போன்று ஜின் இனமும் ஒரு பெரிய சமூகமாக ஆண் - பெண், சந்ததி பெருக்கம், பிறப்பு வாழ்வு, இறப்பு என்று மனித இயல்பில் பெரும் பகுதி கொடுக்கப்பட்டவை ஹராம் - ஹலாலுக்கு உட்படுத்தப்பட்டவை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

நபி(ஸல்) அவர்களுடன் நடந்த சந்திப்பு.

(நபியே) இந்தக் குர்ஆனை செவியேற்பதற்காக ஜின்களிலிருந்து சிலரை நாம் உம்மிடம் திருப்பியதும் அவர்கள் அங்கு வந்தபோது மௌனமாக இருங்கள் என்று(உடனிருந்தவர்களிடம்) சொன்னார்கள். குர்ஆன் படிப்பது முடிந்ததும் தம் சமூகத்தாரிடம் சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர். (அல் குர்ஆன் 46:29)

(ஜின்கள்) கூறினார்கள் 'எங்களுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப் படுத்துகிறது அது உண்மையின் பக்கமும் - நேரான மார்க்கத்தின் பக்கமும் (நமக்கும் சேர்த்து) வழிக்காட்டுகிறது. (அல் குர்ஆன் 46:30)

எங்களுடைய கூட்டத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து அவரை ஈமான்(நம்பிக்கைக்) கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கு மன்னிப்பு அளிப்பான். நோவினைத் தரும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான் என்றும் கூறினார்கள் (அல் குர்ஆன் 46:31)

ஆனால் எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்கவில்லையோ அவரால் பூமியில் (சத்தியத்தை)இயலாமலாக்க முடியாது. அவனையன்றி பாதுகாப்போர் எவருமில்லை. (அல் குர்ஆன் 46:32)

இது நபி(ஸல்) தாயிபிலிருந்து திரும்பும் வழியில் குர்ஆனை ஓதி வரும் போது ஜின்கள் செவியேற்று அவர்களை விசுவாசித்த சம்பவமாகும். இந்த சந்தர்பத்தில் ஜின்கள் தம்மிடம் வந்ததையோ - குர்ஆனை சேவியேற்று சென்றதையோ நபி(ஸல்) அறியவில்லை. பின்னர் இறைவன் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான். இதை 72 வது அத்தியாயத்தின் ஆரம்ப வசனத்திலிருந்து அறியலாம். மேலும் அந்த அத்தியாயத்தில் இறைவனுக்கு இணை கற்பித்து முஷ்ரிக்குகளாகவும் - காபிர்களாகவும் இருக்கும் ஜின்கள் பற்றியும் படைத்த ஒரே இறைவனுக்கு கட்டுப்பட்டு ஏகத்துவத்தை ஏற்று முஸ்லிம்களாக வாழும் ஜின்கள் பற்றிய விபரமும் கூறப்பட்டுள்ளது.

46:30 வது வசனத்தில் மூஸாவிற்கு பிறகு இது இறக்கப்பட்டுள்ளது என்ற ஜின்களின் கூற்றிலிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள முக்கிய நபிமார்களையும் அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் ஜின்கள் அறிந்திருந்தனர் என்பதையும் அவற்றின் மீது நல்ல ஜின்கள் விசுவாசம் கொண்டிருக்கக் கூடும் என்பதையும் விளங்கலாம்.

ஜின்களுக்கும் தூதுத்துவ செய்தியை எடுத்துக் கூறும் பொறுப்பு நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டப் பிறகு ஜின்களின் பிரதிநிதிகள் நபி(ஸல்) அவர்களை சந்தித்து - அழைத்து சென்ற விபரம் முஸ்லிம் - திர்மிதி - அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஜின்கள் நபி(ஸல்) அவர்களை சந்தித்த இரவில் அந்த சந்திப்பில் தாமும் கலந்துக் கொண்டதாக கூறும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள். அந்த இரவில் ஜின்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்ட சம்பவத்தையும் - ஜின்களின் காலடி சுவடுகள் - அவர்கள் சமைத்த பாத்திரங்கள் - அடுப்புகள் குறித்தும் அறிவிக்கிறார்கள். (திர்மிதி 3311)

இந்த சந்திப்பிற்கு பிறகு தான் நபி(ஸல்) கீழ் கண்ட அறிவிப்பை செய்கிறார்கள்.

நீங்கள் மல ஜலம் கழித்தால் விட்டை மற்றும் எலும்பால் சுத்தம் செய்யாதீர்கள் ஏனெனில் அவை உங்கள் சகோதர ஜின்களின் உணவாகும். (அபூஹூரைரா - இப்னு உமர் - ஜாபிர் போன்ற நபித்தோழர்கள் இந்த செய்தியை அறிவித்து இதில் உடன் படுகிறார்கள். முஸ்லிம் - திர்மிதி - அபூதாவூத் - ஹாக்கிம்)

ஜின்களும் - சுலைமான் (அலை) அவர்களும்.

தாவூத்(அலை) அவர்களின் மகனான சுலைமான்(அலை) அவர்களுக்கு இறைவன் வல்லமை மிக்க அரசாங்கத்தையும் - ஆற்றல் மிகுந்த வலிமையையும் - மெய் சிலிர்க்கக் கூடிய மொழியாற்றலையும் கொடுத்திருந்தான். இவற்றிர்க்குரிய ஆதாரங்களை முதலில் அறிவோம்.

சுலைமானுக்கு நாம் கடுமையாக வீசும் காற்றையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அது அவரது ஏவலின் படி பாக்கியம் பொருந்திய பூமிகளுக்கு அவரை எடுத்துச் செல்லும். (அல் குர்ஆன் 21:81)

ஷைத்தான்களிலிருந்து கடலில் மூழ்கி(முத்தெடுத்து) வரக் கூடியவர்களை வசப்படுத்திக் கொடுத்தோம். (அல் குர்ஆன் 21:82)

சுலைமானுக்கு ஜின்கள் - மனிதர்கள் - பறவைகள் ஆகியவற்றிலிந்து படைகள் திரட்டப்பட்டு அவை தனித் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. (அல் குர்ஆன் 27:17)

எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஒரு எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) ஓ! எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுக்குள் நுழைந்துக் கொள்ளுங்கள். சுலைமானும் அவருடைய சேனைகளும் அவர்கள் அறியாத விதத்தில் உங்களை நசுக்கி விடாதிருக்க... என்று கூறிற்று. இதைக் கேட்டு (சுலைமான்) அவர் புன்னகைத்தார் (அல் குர்ஆன் 27:18 - 19)

சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் அதன் காலை பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகி ஓட செய்தோம். ஜின்களில் உழைப்பவற்றிலிருந்து அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். (அல் குர்ஆன் 34:14)

இந்த வசனங்கள் அனைத்தும் சுலைமான்(அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அருட்கொடையின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. அவருக்கு மட்டும் இப்படிப்பட்ட அருட்கொடை கிடைக்கக் காரணம் என்ன?

அவர்கள் இறைவனிடம் முறையிட்ட முறையீடுதான்!

எனக்கு பின்னர் எவருமே அடைய முடியாத ஒரு அரசாங்கத்தை எனக்கு அன்பளிப்பாக கொடுப்பாயாக நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய் என்று கூறினார் (அல் குர்ஆன் 38:35)

சுலைமான் நபி அவர்களின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அவர்களுக்கு பின் எவருமே அடைய முடியாத பெரும் அரசாங்கத்தை அவர்களுக்கு வழங்கினான். அதற்குரிய ஆதாரங்களைத் தான் மேலே கண்டோம். அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்ததில் ஜின்களும் அடங்கும். பலசாலியான ஜின்கள் - முத்துகுளிக்கும் ஷைய்த்தான்கள் எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்தன.

வீட்டிற்கு வரும் - ஜின்கள் - பாம்புகள்

ஜின் என்ற அரபு பதத்திற்கு - மறைவானது - என்று பொருள். ஜின் என்ற படைப்பு கண்ணுக்குப் புலப்படாததாக இருப்பதால் அவற்றிர்க்கு அந்தப் பெயர் வந்தது. சில உயிரினங்கள் உருமாற்றம் பெரும் தன்மையைப் பெற்றுள்ளதை நாம் அறிவோம். அதே போன்று ஜின்களும் பல வடிவங்களில் உருமாற்றம் பெரும் சக்தியைப் பெற்றதாகும்.

ஜின்கள் மூன்றுவகைப்படும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

1) பாம்பு வடிவில் உள்ளவைகள். 2) (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழ்பவை 3) ஆகாயத்தில் பறப்பவை. (அபூ தஅல்பா (ரலி) ஹாக்கிம்)

பொதுவாக பாம்பினத்தை ஜின்கள் என்று குறிப்பிடலாம் இதற்கு குர்ஆனில் ஆதாரம் கிடைக்கிறது. (பார்க்க 27:10)

பாம்புகள் அனைத்தும் ஜின்கள் இல்லை ஆனால் ஜின்களில் சிலது பாம்புகளிலும் அடங்கும். இதை கருத்தில் கொண்டுதான் வீட்டில் உலவும் பாம்புகளை எடுத்தவுடன் அடித்து விட வேண்டாம் ஏனெனில் அவை ஜின்களாகக் கூட இருக்கலாம் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.

ஜின்கள் கடும் விஷம் உள்ள பாம்புகளின் உருவில் இருக்காது என்பதால் கடும் விஷம் உள்ள பாம்புகளை எங்கு கண்டாலும் உடனே அடித்து விட வேண்டும்.

நபி(ஸல்) மேடையில் நின்று உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ''பாம்புகளைக் கொள்ளுங்கள் - முதுகில் வெள்ளைக் கோடுள்ள பாம்பையும் - குட்டையான சிதைந்த வாலுள்ள பாம்பையும் கொள்ளுங்கள் அவை இரண்டும் கண் பார்வையை அழித்து விடும்'' என்றார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி 3297)

விஷமுள்ள பாம்புகளை நபி(ஸல்) குறிப்பட்டுக் காட்டியதிலிருந்து அத்தகையப் பாம்புகளை காலம் கடத்தாமல் அடித்து விட வேண்டும். நல்லப் பாம்பை அடிக்காமல் விட்டு விட வேண்டும் என்பதெல்லாம் இந்த ஹதீஸ் கட்டுப்படுத்தாது. அவை கட்டாயம் அடிக்கப்பட வேண்டிய பாம்புகளாகும்.

வீட்டில் தென்படும் பாம்புகளில் ஜின்களும் அடங்கும் அதனால் அதை உடனே அடிக்காமல் போய்விடு என்று கூறுங்கள் மூன்றுமுறை கூறியும் போகாவிட்டால் அதை அடியுங்கள் என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூ லுபாபா(ரலி) புகாரி 3298 - முஸ்லிம்)

பாம்புக்கு காது கேட்குமா... தமிழ் அறியுமா... என்றெல்லாம் அலச வேண்டிய அவசியமல்லை. பாம்புக்கு செவி புலன் கிடையாது என்பது உண்மைதான். பாம்புக்கு தான் செவி புலன் கிடையாதே தவிர பாம்பு வடிவில் வரும் ஜின்னுக்கு செவிபுலன் உண்டு. ''போய்விடு'' என்ற அறிவிப்பு ஜின்னுக்குத் தானே தவிர பாம்புக்கு அல்ல. நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் பொய் இருக்காது என்பதால் எந்த மொழியில் சொன்னாலும் ஜின்களுக்கு விளங்கும் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுலைமானுக்கு கட்டுப்பட்டதாக இருந்தால் போய் விடு என்று ஹதீஸ் இருப்பதாக நாம் அறிந்தவரை தெரியவில்லை. சிந்தித்துப் பார்க்கும் போது அவ்வாறு நபி(ஸல்) சொல்லி இருக்க முடியாது என்று புரிந்துக் கொள்ளலாம்.

சுலைமான்(அலை) அவர்களுக்கு ஜின்கள் கட்டுப்பட்டன என்பது உண்மை. இந்த கட்டுப்பாடு எதுவரை நீடித்தது? அவர்கள் உயிரோடு இருக்கும் வரை தான் இந்த கட்டுப்பாடு நீடித்தது. இதை நாமாக சொல்லவில்லை. குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்.

(சுலைமான்) அவர் மீது நாம் மரணத்தை விதித்த போது அவரது கைத் தடியை அறித்த நிலத்து பூச்சி (கரையான்)யைத் தவிர வேறெதுவும் ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழவே 'மறைவான விஷயங்களை நாம் அறிந்திருந்தால் இழிவு தரும் இந்த கடின வேலையில் நீடித்திருக்கத் தேவையில்லை என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (அல்குர்ஆன் 34:14)

சுலைமான் (அலை) இறந்து அது ஜின்களுக்கு தெரிய வந்ததும் அவரது கட்டுப்பாட்டிலிருந்து ஜின்கள் விடுபட்டு விட்டன என்பதை இந்த வசனம் தெளிவாக அறிவித்து விடுகிறது. எனவே இன்றைக்கும் ஜின்கள் சுலைமானுக்கு (அலை) அவர்களுக்கு கட்டுப்படுகிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம். (ஜின்கள் கட்டுப்படுவதாக இருந்தால் அவற்றிர்க்கு கட்டளையிட சுலைமான் (அலை) உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இல்லையென்றால் ஜின்களுக்கு கட்டளையிடுவது யார்?)

ஒரு வேளை இன்றைக்கும் கட்டுப்படுவதாகவே வைத்துக் கொள்வோம் - ஒரு பேச்சுக்குதான் - வைத்துக் கொள்வோம்.

பிறரது கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிர்க்கு நாம் எப்படி ஆர்டர் போட முடியும்.

ஒரு பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் ஆசிரியரைப் பார்த்து மாணவன் நீங்கள் தலைமையாசிரியருக்கு கட்டுப்பட்டவராக இருந்தால் எனக்கு அதிக மார்க் போடுங்கள் என்கிறான்.

முகலாய மன்னர்களுக்கு நீங்கள் கட்டுப்படுபவர்களாக இருந்தால் எங்களுக்கு வரி கொடுங்கள் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள்.

இதுவெல்லம் அறிவுப்பூர்வமான வாதம் என்று யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். சுலைமான்(அலை) அவர்கள் பற்றிய நிலையும் அப்படித்தான். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் யாராவது இப்படி சொல்லி இருந்தாலாவது ஓரளவு நியாயம் இருக்கும். அவர்கள் மவுத்தாகி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி சொல்வது எந்த வகையிலும் பொருந்தவில்லை.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்கள் மட்டும் வசப்பட்டு இருக்கவில்லை. காற்றும் வசப்பட்டிருந்தது. இன்றைக்கு வேகமாக புயல் காற்று வீசும் போது ''நீ சுலைமானுக்கு கட்டுப்பட்டால் வீசாமல் நின்று விடு'' என்று யாராவது சொல்ல முடியுமா... ஜின்களுக்கு ஒரு நியாயம் காற்றுக்கு ஒரு நியாயம் கற்பிக்க முடியாது.ஏனெனில் இரண்டும் சுலைமான் நபிக்கு கட்டுப்பட்டது தான். 

சுலைமானுக்கு கட்டுப்பட்டால் என்று ஹதீஸ் இருப்பதாக யாராவது கூறினால் ஹதீஸ் என்னையும் அது இடம் பெறும் நூலையும் கேளுங்கள் முடிந்தால் அந்த காப்பியை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஜின்கள் பற்றி ஓரளவு இந்தக் கட்டுரையில் விளக்கியுள்ளோம். ஜின்களை வசப்படுத்த முடியுமா... போன்ற மேலதிக விளக்கம் தேவைப்படுபவர்கள் எங்களுக்கு எழுதலாம். (இறைவன் மிக்க அறிந்தவனாக இருக்கிறான்)
 
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

23 February 2009

ஓடிப் போன கணவன் - காத்திருக்கும் மனைவி.

ஓடிப் போன கணவன் - காத்திருக்கும் மனைவி.

From: ZUBAIR AHAMED Date: 2009/2/17
To:
fromgn@googlegroups.com

எனது தம்பி முஸ்லிமானவர் முஸ்லிமான பெண்ணை மணமுடிதபின்னர் நான்கு வருடன்கல் வாழ்ந்து வெரொரு இந்து பெண்ணை கூட்டி கொண்டு ஒடிவிட்டார் வருடம் இரண்டு முடிந்து விட்டது ஒடிபொனவன் என்கெங்றும் தெரியவில்லை முதல் முச்லிம் மனைவிக்கு முடிவு என்ன?


From: Abufaisal Date: 2009/2/18
To:
fromgn@googlegroups.com
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....
சகோதரர் ஜுபைர் அவர்களுக்கு

இவ்வகையான வழக்கில் சட்டப்படி இந்தப்பெண் "காணாமல் போனவரின் மனைவி" என்று கருதப்படுகிறார், இதன்படி அப்பெண்ணின் கணவன் தொலைந்துவிட்டதாகவே கருதப்பட்டு அவனின் திரும்புதலுக்கான காத்திருப்பு காலமும் முடிந்துவிட்ட நிலையில் அவன் இறந்து போனவனாகவே கருதப்படுவான்.

இந்நிலையில் ஏற்கனவே இப்பெண்ணின் கணவன் ஓடிப்போய் இரண்டாண்டு காலம் முடிந்துவிட்டதாலும் அவன் இருக்குமிடம் தெரியவில்லை என்பதாலும் ஷரீயத் முறைப்படி நீதிபதியை (ஊர் ஜமாத்தை)அணுகி இத்திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள இந்த பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. பிறகு முறைப்படி (இறந்த கணவனுக்கு) இத்தா இருப்பதுபோல் இருந்துவிட்டு வேறு திருமணம் செய்துகொள்ளலாம்.
 
ஆதாரம்: ஷேய்க் பின் உத்தைமீன் அவர்களின் ஃபத்வாவிலிருந்து.
Book: Selected Fatawa for Women (page#40) by Muhammad bin Abul-Aziz Al-Musnad
அன்புடன்,
 
சகோ. அபூஃபைஸல்


From: Mohamed Abbas Date: 2009/2/21
To: fromgn@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்.........

ஹசன் அல்பஸரி(ரஹ்) அவர்கள் கூறினார்கள்

ஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டால் அவள் அவருக்கு விலக்க பட்டவளாக ஆயி விடுவாள் என்று அறிஞர் கூறுவதுடன் அதனை ஹரமுடன் பித்தலாக் அல்லது ஹராமுன் பில்பராக் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.ஆனால் இது உணவைஒருவர் ஹராமாக்கி போன்ற தன்று.ஏனெனில், அனுமதிக்கப்பட்ட உணவைஒருவர் தமக்கு விளக்கி கொள்வதால் 'ஹரமான உணவு சொல்லப்பட்டது" மனவிலக்கு செய்யப்பட்ட பெண்ணை விலக்கப்பட்டவள் என்று சொல்வதுன்டு மூன்று கட்ட விசயத்தில் அல்லாஹ் கூறினான்; பின்னர் அவன் (மூன்றாவது தவனையில்) அவன் தலாக் சொல்லிவிட்டால்,பிறகு அவனில்லாத வேறொரு கணவனை மணக்கிறவரை அவள் மணக்கும் வரை அவனுக்கு அவள் அனுமதிக்கப்பட்டவள். திருகுரான் (2:230) நூல் புகாரி 5263

இதிலிருந்து மூன்று தலாக் சொல்ல ப்பட்ட பின் தான் அவளுக்கு அடுத்த கணவரை மணக்க ஹலால் என்று அனுமதிக்கப்படும்.

மனிதன் தன் மனைவியை ஹராமாக்கி கொண்டால் அது ஒரு பொருட்டல்ல( அது தலாக் ஆக கருத  முடியாது) என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறி உண்மையில் அல்லாவின் தூதரரிடத்தில் தான் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது என்று கூறினார்கள் புகாரி 5266

அதனால் அவர் அவளை ஹராமாக்கி சென்றாலும் (விட்டு தனித்து சென்றாலும்)அது தலாக் ஆக முடியாது. நிச்சயம் அவன் அவளுக்க்று மூன்று தலாக் கூறியே ஆக வேண்டும்.

எந்த பொருளுக்கு தான் உரிமையானில்லையோ, அந்த பொருளுக்கு நேர்ச்சை செய்ய ஆதமின் மகனுக்கு உரிமையில்லை, எந்த அடிமைக்கு அவன் உரிமையாளனில்லை அந்த அடிமையை விடுதலை செய்யவும் அவனுக்கு உரிமையில்லை.எந்த பெண்ணுக்கு(மணபந்ததின் வாயிலாக) உரிமையாளானாக இல்லை அவளை தலாக் செய்யவும் அவனுக்கு உரிமையில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷீஐபு(ரலி) அவர்களின் பாட்டனர்  வாயிலாக அறிவிக்கிறார். நூல் திர்மதி, அபுதாவுது, திர்மதியில் ஸஹிஹ் வான தரத்தில் அமைந்துள்ளது. இப்னு கதிர் ஹதிஸ் கித்தாபு 1120

அதனால் யாருக்கும் அவளை தலாக் அல்லது விடுவிக்க அதிகாரமும் அல்லது தலாக் சொல்ல உரிமையில்லை... அது ஊர் தலைவராக இருந்தாலும் சரி, வேற யாராக இருந்தாலும் சரி..அவளுடைய கணவன் தவிர..

உண்மையில் கணவர் மனைவி மத்தியில் உள்ள திருமண ஒப்பந்தம் கணவன் இருந்தால் அல்லது அவனால் முறிந்தால் தான் முடியும் வேறு எவராலும் சாதரணமாக முறிக்க முடியாது. ஆனால் கணவன் மறைந்துவிட்டானோ? உயிருடன் இருக்கின்றானோ என்ற சந்தேகம் இருக்கும் போது வேறு யார்? இந்த பந்தத்தை முறிக்க முடியும்? முறிப்பதாக இவர்கள் தீர்ப்பு செய்தபின் மறுபடி கணவன் வந்து விட்டால் என்னவாகும்? அல்லாஹ் அவனுக்கும் மட்டும் அளித்த் உரிமையில் கை வைக்க அதிகாரம் பெற்றவர் யார்?என்று கலிபா ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள்  கூறினார்கள். மேலும்  '' அல்லாஹ்வினாள் சோதிக்கப்பட்ட பெண்'' என்று  கூறினார்கள். நூல் தாரகுத்னி 3/313. இது ஸஹிவான ஹதிஸ் என்று தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்.

இருவரது திருமண உறவைப் பிரிக்க கூடாது, தொன்னூறு ஆண்டுகள் கழித்த பின்னரே அவன் இறந்து விட்டதாக முடியு செய்யப்படும்.அவனது மனைவி அது வரை அவனது மனைவி இத்தா இருப்பாள்

 நூல் கன்ஸீத்தகாயிக் பாகம் 1 பக்கம் 220

சில இமாம்கள் 120 ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

சிலர் 70 ஆண்டுக்கு பிறகு என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்

இதை அவர்கள் நபி(ஸல்) அவர்கள் எனது உம்மத்தின் வயது 60 முதல் 70 வரை இருக்கும் என்ற ஹதிஸிலிருந்து தொகுத்தார்கள்..

அவன் இறந்துவிட்டால் அல்லது மூன்று தலாக் சொல்லும் வரை அவர்களின் திருமண பந்தம் பிரியாது.. யாரலும் பிரிக்க இயாலது என்று மார்க்க அறிஞர்களான் நல் இமாம்கள் கூறியுள்ளார்கள்..

இதற்கு மாற்றமாக திருமண செய்து கொள்ளலாம் இருந்தால் நபி(ஸல்) அவர்கள் கூறி இருந்தால் தாரளாமாக எடுத்து கொள்ளங்கள். இதில் ஏதெனும் குறை இருந்தால் அல்லாவுக்காக என்னை மன்னித்து விடுங்கள்..

From: நமக்குள் இஸ்லாம் Date: 2009/2/22
To: fromgn@googlegroups.com

ஓடிப் போன கணவன் - காத்திருக்கும் மனைவி.
 
மனைவியை விட்டு ஓடி போய், தன்னைப் பற்றி எந்த தகவலையும் மனைவிக்கு தெரிவிக்காமல் ஒரு கணவன் இருக்கிறான் என்றால் அந்த மனைவியின் நிலை என்னவென்பது பற்றி அறிஞர்கள் மத்தியில் மாற்று கருத்து இருப்பதற்கு காரணம் இப்படி ஒரு சம்பவம் நபி(ஸல்) காலத்தில் நடக்கவில்லை என்பதேயாகும்.
 
இதற்கான நேரடியான ஆதாரங்களை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இந்த பிரச்சனையை எப்படி அணுகுவது என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து சிந்தித்தால் இது குறித்து ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.
 
தலாக் (மணவிலக்கு) போன்ற சட்டவிதிகளை நாம் இங்கு பொருத்திப் பார்ப்பதற்கு முன் (அந்த விதிகள் இங்கு பொருத்தமற்றது என்பதை பின்னர் பார்ப்போம்) கணவன் - மனைவிக்கு மத்தியில் உள்ள உரிமைகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
 هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ 
(கணவர்களாகிய) நீ்ங்கள் (மனைவிகளாகிய) அவர்களுக்கு ஆடையாகவும் (மனைவிகளாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். (அல்குர்ஆன்: 2:187)
 
கணவன் மனைவிக்கு மத்தியில் இருக்க வேண்டிய நெருக்கம், பாசம், புரிந்துணர்வு, அனுசரிப்பு, மகிழ்ச்சி போன்றவற்றை இதைவிட தெளிவாக விளக்கவே முடியாது என்று கூறும் அளவிற்கு இறைவன் அத்துனை அற்புதமான உதாரணத்துடன் விளக்கியுள்ளான்.  (ஓடிப் போன கணவன் இது எல்லாவற்றையும் உதாசீணப்படுத்தியவனாவான்)
 
نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُواْ حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ
உங்கள் மனைவிகள் உங்களின் விளைநிலங்களாவார்கள். உங்கள் விளைநிலத்திற்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள். (அல்குர்ஆன் :2:223)
 
மனைவியை விளைநிலம் என்ற உவமையோடு இறைவன் சுட்டியுள்ளதை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். பல்வேறு பேருண்மைகளை இந்த உவமை உள்ளடக்கியுள்ளது.  அவற்றையெல்லாம் நாம் இங்கு விரிவாக விளக்கப் போவதில்லை.  விளைநிலத்தை வைத்திருப்பவர்கள் அதை பக்குவப்படுத்த - பாதுகாக்க கடமைப்பட்டவர்களாவார்கள். இந்த கடமையை நிறைவேற்றாதவர்கள் விளைநிலங்களில் சொந்தக்காரர்கள் என்ற அருகதையை இழந்துவிடுவார்கள்.  (ஓடிப் போகும் கணவன் தனது விளை நிலத்தைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல் கிளம்பி விடுகிறான்).
 
وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ
(மனைவிகளாகிய) அவர்கள் மீது கணவர்களுக்கு இருக்கும் உரிமைப் போன்று மனைவிகளுக்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு (அல்குர்ஆன் 2:228)
 
மனைவி கணவனுக்கு அடிமையல்ல,  கணவனைக் கண்கண்ட தெய்வமாகவோ,  தன்னை விட எல்லா வகையிலும் உயர்ந்தவன் என்ற எண்ணத்தில் தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவனுக்கு தலையாட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற உணர்வோ பெண்ணுக்கு இருக்கத் தேவையில்லை.  கணவன் மனைவி என்று கைகோர்த்துக் கொண்ட அந்த ஒப்பந்தத்தின் அர்த்தம் ஒருவர்மீது இன்னொருவருக்கு உரிமையுண்டு என்பதின் அடிப்படையிலேயே என்பதை இந்த வசனம் தெளிவாக முன் வைக்கின்றது. ( மனைவியை விட்டு ஓடிப் போகும் கணவன் எந்த உரிமையில் அவ்வாறு செய்கிறான் என்பதை யார் விளக்க முடியும்)
 
இந்த வசனங்களை கருத்தில் கொள்பவர்கள் ஓடிப் போன கணவனுக்காக மனைவி காலம் முழுவதும் காத்திருக்க வேண்டும் என்ற வரட்டு சட்டத்தை - பெண்களை ஜடங்களாக ஆக்கி வைக்கும் சட்டத்தை முன் வைக்க மாட்டார்கள்.   அவளது மனநிலையையும், வாழ்வாதாரத்தையும், உடல் தேவைகளையும் புரிந்துக் கொண்டு ஒரு வழிகாணவே முயல்வார்கள்.  
 
மஸாயில் என்ற பெயரில் 99 வருடம், 120 வருடம் அந்தப் பெண் காத்திருக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளதையெல்லாம் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.  இல்லறத் தேவைகளெல்லாம் முடிந்து, தள்ளாத வயதாகி இருக்கும் போது அந்த கணவன் வந்தால் என்ன? வரவில்லையென்றால் என்ன? அதனால் அந்த பெண்ணுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.    இந்த சட்டத்தை ஆதரி்பபவர்கள் தங்கள் குடும்ப பெண்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் (அல்லாஹ் காப்பாற்றட்டும்) அந்த பெண்ணை இப்படி காக்க வைப்பார்களா... என்பதையும் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். 
 
தலாக் சட்டம் பொறுந்துமா?
 
ஓடிப் போகும் கணவனிடம் தலாக் கொடுக்கும் சட்டம் இருப்பதால் அவனால் தான் அதை செய்ய முடியும் மற்றவர்கள் இதில் தலையிட முடியாது என்ற கருத்து முந்தைய பதிவில் வைக்கப்பட்டுள்ளது.  மனைவியை பிடிக்கவில்லை என்றால் அவளிடமிருந்து விடுதலைப் பெற சொல்லப்பட்ட சட்டம் தான் தலாக்.  மனைவியை தன் கட்டுப்பாட்டில் அடிமைப் போன்று வைத்துக் கொள்ள சொல்லப்பட்ட சட்டமல்ல.   கணவனைப் பிடிக்காத போது மனைவியும் அவனிடமிருந்து விகாரத்தை பெற்று்க் கொள்ளலாம் இதையும் இஸ்லாம் வழங்கியுள்ளது.   இந்த இரண்டு சட்டங்களும் ஒருவரையொருவருக்கு பிடிக்காமல் போகும் போது முன்னெடுக்க வேண்டிய சட்டங்களாகும்.   ஓடிப் போன கணவன் விஷயத்தில் இதை எப்படி பொருத்திப் பார்க்க முடியும். 
 
காத்திருக்க வேண்டிய காலம்
 
கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியிலுள்ள குடும்ப உறவுக்கான விதிகளையும் - சட்டங்களையும் புறக்கணித்து விட்டு ஒருவன் ஓடுகிறான் என்றால் அவனுக்காக (அவன் எங்கிருக்கிறான் என்பதை அறியாத நிலையில்)  காலம் முழுதும் காத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் பெண்ணுக்கு தேவையில்லை.   அவள் காத்திருக்க வேண்டிய காலம் பற்றி நேரடியாக ஆதாரங்கள் கூறாவிட்டாலும் பிற ஆதாரங்களிலிருந்து காத்திருக்க வேண்டிய காலத்தை நாம் தீர்மானிக்கலாம்.
 
 ஹதீஸ்.
 
 இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக் கொள். பிறகு, ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்து விடு. இல்லையென்றால் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக் கொள்" என்றார்கள்.
 
அந்த மனிதர், 'வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்கு உரியது." என்று கூறினார்கள்.
 
அந்த மனிதர், 'வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப்பையும் (வயிறும்) அன் குளம்பும் உள்ளது. அதை அதன் எஜமான் சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது; (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக் கொள்கிறது;) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கிறது" என்று கூறினார்கள்.
 
(ஸைத் இப்னு காலித்(ரலி) பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2429)
 
கணவன் என்னவானான் என்று தெரியாத நிலையிலிருக்கும் பெண் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள மூன்று சூழ்நிலையில் ஒன்றை சார்ந்தவளாகவே இருப்பாள்.
 
கணவன் என்னவானான் என்று தெரியாத நிர்கதியாகிவிட்டவள் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாகவே தெரிகிறாள். அவள் விஷயத்தில் அவளின் பொறுப்புதாரிகள் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் சமூகத்தில் கலந்து வாழும் மனித ஓநாய்கள் அவளது இளமையை - தனிமையை கவனித்து அவளை பாழ்படுத்த எண்ணலாம். 
 
தன் கணவன் உயிரோடு இருக்கிறான். இந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரியவரும் போது அந்த நம்பிக்கையே ஒரு பெண்ணை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் காத்திருக்க வைத்து விடும். சமூக போராட்டங்ளுக்கு மத்தியில் அவள் தன்னை காத்துக் கொள்ள தயாராகி விடுவாள்.  கணவனைப் பற்றிய நம்பிக்கையே அற்றுப் போன நிலையில் ஒரு பெண் எதை முன்னிருத்தி தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை பொறுப்புதாரிகள் சிந்தித்தால் "கிடைத்த பொருள் ஓராண்டுவரை அடைக்கலமாக இருக்கட்டும்" (சில அறிவிப்புகளில் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என்றும் வந்துள்ளது) என்று இந்த ஹதீஸில் வழிகாட்டியுள்ளப்படி அதிகப்பட்சமாக மூன்றாண்டுகள் கணவனைத் தேடும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தலாம்.
 
தகவல் புரட்சி விண்ணை முட்டும் காலத்தில் வாழ்கிறோம். ஒன்றைத் தெரிந்துக் கொள்வதற்கு மூன்றாண்டுகாலம் என்பது இன்றைக்கு பெரிய பொழுதுதான் என்றாலும் ஹதீஸ்களில் அந்த கெடு வந்துள்ளதால் அதையே கடைபிடிக்கலாம்.  நம்மாலான அனைத்து வழியிலும்  கணவனை தேடி பார்க்க வேண்டும்.  மனைவி தேவை என்றால் இந்தக் காலகட்டங்களில் அவன் நிச்சயம் தொடர்புக் கொள்வான். அப்படி ஒரு தொடர்பு ஏற்பட்டு விட்டால் அவள் அதன் பிறகு காத்திருப்பது அவளது சொந்த விருப்பத்திற்குட்பட்டதாகிவிடும்.
 
இந்தக் காலகட்டத்திற்குள் கணவனைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவள் விஷயத்தில் கணவன் நம்மை விட்டு பிரிந்து விட்டான்  என்று முடிவு எடுத்துக் கொள்ள வேண்டிதான் வரும்.  பிரிந்த கணவனுக்கு மனைவி எத்தகைய நிலையை கடைபிடிக்க வேண்டுமோ அதை கடைபிடித்து விட்டு அவள் வேறு வாழ்க்கைக்கு தயாராகிக் கொள்ளலாம்.  அதன் பிறகு கணவன் உயிரோடு வந்தாலும் இவளைப் பொருத்தவரை அவனைக் கண்டுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மீண்டும் அவனை இணைத்து வைக்க எத்தகைய முயற்சியும் எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவன் ஏதாவது பிரச்சனை செய்வான் என்ற அச்சம் இருந்தால் அவன் நடவடிக்கையை பார்த்து சட்ட ரீதியாக அவனை தண்டனைக்குட்படுத்தலாம்.
 
(இறைவா நீ அனைத்தையும் அறிந்த நுண்ணறிவாளன் என்பதை நாங்கள் நம்புகிறோம்)

From: Mohamed Abbas Date: 2009/2/22
To:
fromgn@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்...

சகோதரர் காணமல் போன ஒரு மனித வர்க்கத்தை காணமல் போன பொருளுடு ஒப்பிடுவதா? அஸ்த.'.பருல்லா.... அவர் அறிவித்த ஹதிஸ்களை அவர் நன்றாக பார்கட்டும்.. துளைந்து போன ஒரு பொருளை கண்டெடுக்கும் போது நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்கள்..   அந்த பெண் என்ன வழியில் தவறி போனாலா, அதை எந்த வீதியில் கண்டு பிடித்து யாரிடம் விளம்பரம் படுத்தினீர்களா? உயிரில்லாத ஒரு பொருளுடன் ஒரு உயிருள்ள மனிதனை இப்படி தான் வேறுபடுத்திவிர்களா? அதே புகாரியில் 2427,2426. நன்றாக படியுங்கள் புகாரி 2426-ல் உபை இப்னு காஅப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் 'அடையாளம் புரிந்து கொள்பவர் யாரும் வரவில்லை என்றும்' புகாரி 2427-ல் ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அதை பற்றி அடையாளம் தெரிபவர் யாரெனும் வந்தால் உன்னிடம் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு இல்லை என்றால் நீ வைத்து கொள்.என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். யாரென்று அறியப்படத்தவருக்கு நபி(ஸல்) அவ்ர்கள் பதில் கூறினார்கள்.ஏன் யாருக்குமே அந்த நபரை தெரியாதாம்? ஒரு ஆதாரம் கூட எதுவும் இல்லை. அது எப்படி அவர்களுக்கு பொருந்தம்.. அடையள தெரிந்த நபரை கண்டால் ஒப்படைத்து விடு தான் என்று சொன்னார்கள். அப்படியே எடுத்து ஒளிக்கவோ அல்லது மறைத்து வைக்கவோ சொல்லவில்லை.அவரை யாரு என்று யாருக்குமே தெரியாதா? அது எப்படி இவருக்கு பொருந்தும்.சரி வழிதவறிய ஆடு ஒன்று உள்ளது என்று கேட்டதற்கு நபி(ஸல்) அது உனக்குரியது அல்லது உனது சகோதரிக்குரியது அல்லது ஓ நாய் குரியது என்று சொன்னார்கள்.. நீங்கள் எப்படி அந்த பெண்ணை பிர்ப்பீர்கள். அதுபோல் உங்களுக்கும் பிரிப்பதற்கு யார் கொடுத்தார்கள்? மேலும் வழி தவறிய ஒட்டகத்தை பற்றி கேட்டார் இதை கேட்டவுடன் நபி(ஸல்) அவர்கள் அவர்களின் திருமுகம் நிறம் மாறிவிட்டது.. பிறகு நபி(ஸல்) அவர்கள் உனக்கும் அதற்கும் என்ன சம்மந்தம்?அதனுடனே அதன் குளம்பும் அதன் தண்ணீர்பையும் உள்ளதே! அதை அந் எஜமான் அடைந்து கொள்ளும் வரை நீர் நிலைகளுக்கு செல்கிறது மரத்திலிருந்து தின்கிறது என்று சொன்னார்கள்.. இதன் படி நபி(ஸல்) அவ்ர்கள் கூறிவிட்டார்கள் அப்பெண் விசயத்தில் யாருக்கும் சம்மந்தமில்லை. இதிலிருந்து அவருடைய கணவர்  வரும் வரை அப்பெண் காத்திருக்க வேண்டும்  என்பது ஏன் இந்த ஒட்டகம் காணமல் போன விசய்த்தில் அது பொருத்தாதா? என்ன சகோதரர் பேசுகீறீர்கள்... அல்லாவுக்கு பயந்து உங்கள் பதில்களை பதிவு செய்யுங்கள்.
 
உமக்கு சந்தேகமானவற்றை பின்பற்றதே என்று அல்லா சொல்லும் போது அதை கட்டுபடுங்கள்.. அதற்காக சம்மந்தம் இல்லாததற்கு சம்மந்தம் இல்லாமல் சொல்லாதீர்கள்.. தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்வது தவறு இல்லை.. சகாபாக்கள் ஏதோ தமக்கு சந்தேகமானது இருந்தால் அதை அறிவிக்க மாட்டார்கள்..
 
நீங்கள் இஷ்டப்படி உங்கள் சொந்த கூற்றை அள்ளி வீசி இருக்கிறீர்கள்... இதில் ஒரு பொருளும், ஒருஆடும், ஒரு ஒட்டகம் காணமல் போய் அல்லது வழிதவறி போனதிற்கு நபி(ஸல்) மூன்று விதமாக பதில் சொல்கின்றார்கள். இது தான் என்று உன்மையா இருக்கும் என்று  உங்களுக்கு தெரியுமா? இதில் எதை நீங்கள் இதற்கு தகுந்தார் போல் பதில் சொல்ல போகிறீர்கள்..

மேலும் நபி(ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேர்ச்சம்பழத்தை கடந்து சென்றார்கள். இது சதகா பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் அதை நான் தின்றிருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.என் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி 2431..  இதுயும் ஒரு பொருள் தான்.. இது சதகாக இருக்குமோ என்ற அச்சத்தால் நபி(ஸல்) உண்ணவில்லை.. இது இவருடையது தான் என்று இருந்தால் அதை எடுத்திருக்க கூட மாட்டார்கள்.. ஏன் இதையெல்லாம் நீங்கள் வேறுபடுத்தி சொல்லலமே? மேலும் புகாரி 2435 படித்து பாருங்கள்.

மேலும் எவரேனும் ஒரு பொருளை கண்டு எடுத்தால் அவர் அதற்கு நீதியான இரண்டு சாட்சிகளை நியமனம் செய்து கொள்ளட்டும். இன்னும் அதன் பை மற்றும் கயிற்றை நினைவில் வைக்கட்டும் அதை அவர் மறைக்கவோ அல்லது ஒளிக்கவோ கூடாது.அதன் உரிமையாளர் வத்து விட்டால் அவரே அதில் அதிக உரிமை பெற்றவராவர். இல்லையெனில் அது  அல்லாவின் சொத்தாகும். அதை அவன் விரும்மியவருக்கு அளிக்கிறான் என்று நபி(ஸல்) அவ்ர்கள் கூறுனார்கள் என இயாள் இப்னு ஹிமார்(ரலி) அவ்ர்கள் அறிவிக்கிறார்கள்.. நூல் அஹ்மத், அபுதாவுத், நஸயி, இப்னு மஜா, இப்னு குஸைமா, இப்னுஹிப்பான் மற்றும் இமாம் இப்னுகதீர்.
 
இதில் அக்கணவருக்கே முழு உரிமையுள்ளது.. ஆனால் நீங்கள் சட்ட ரீதியாக அவனுக்கு தண்டனை உட்படுத்தலாம் என்று சொல்கிறீர்களே.. அந்த மாதிரி நபி(ஸல்) அறிவித்த ஹதிஸ் முன்வையுங்கள். சுயமாக உங்கள் விளக்கங்களை கொடுக்காதீர்கள். நாளை அல்லாவுக்கு பதில் சொல்ல வேண்டும்.. மேலும் நபி(ஸல்) அவர்கள் அது அல்லாவின் சொத்து என்றும், அலி(ரலி) அவ்ர்கள் அல்லாவினால் சோதனைச் செய்யப்பட்ட பெண் என்று கூறினார்கள்.

மேலும் ஹாஜிகள் தவறிவிடப்பட்ட பொருள்களை பிறர் எடுப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு உஸ்மான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல் முஸ்லிம்

 நீங்கள் பதித்த கருத்துகள் அனைவருக்கும் பொருந்துமா? உதரணமாக ஹாஜிகள் இது போல் தவறு செய்து விட்டார்.(அஸ்த.'.ப்ருல்லா) அப்போது அவரின் மணவிக்கும் நீங்க சொன்ன கருத்து பொருந்துமா? நபி(ஸல்) அவ்ர்கள் தடை செய்தார்கள் அதை மீறுபவர் யார்? எவருக்கும் அதிகாரமில்லை.
 
 அலி(ரலி) அவர்கள் அறிவித்த ஹதிஸ் தெளிவாக இருக்கும் போதும், நபி(ஸல்) அவ்ர்களின் சொல்லும் திர்மதி  இருக்கும் போது அதை பின்பற்றுவோம்... யாருடைய சுய விளக்கங்களுக்கு பதில் தராமல் நபி(ஸல்) அவ்ர்களின் சொல்லேயும் அலி(ரலி) அவ்ர்களின் கூற்றையும் எடுத்து கொள்வோம்..
 
அல்லா மட்டும் அனைத்தும் அறிந்தவன்
 
From: Abufaisal Date: 2009/2/22
To: fromgn@googlegroups.com
 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....

//இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக் கொள். பிறகு, ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்து விடு. இல்லையென்றால் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக் கொள்" என்றார்கள்.

அந்த மனிதர், 'வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப்பையும் (வயிறும்) அன் குளம்பும் உள்ளது. அதை அதன் எஜமான் சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது; (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக் கொள்கிறது;) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கிறது" என்று கூறினார்கள்.//

கீழே கண்டெடுக்கப்பட்ட பொருள் வழி தவறி வந்த ஆடு, ஒட்டகம் இவையெல்லாம் ஒரு பெண்ணின் வாழ்க்கை விஷயத்திற்கு ஒரு சரியான ஒப்பீடு அல்லது அளவுகோல் என்று எப்படி சகோதரரே எடுத்துக்கொண்டீர்கள்? மேற்கண்ட ஹதீஸை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் சகோதரரே.

மேற்கூறிய இந்த மூன்று ஹதீஸ்களிலும் உள்ளதை பாருங்கள்.

ஓடிப்போன (கணவ)னின் மனைவியை பொருள் மற்றும் விலங்குகளுடன் ஒப்பிட்டதை..

'அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்கு உரியது." 

அதை அதன் எஜமான் சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது; (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக் கொள்கிறது;) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கிறது"

இதெல்லாம் இந்த பெண்ணுக்கும் பொருந்துமா? இது நிர்கதியான பெண்களை கேவலப்படுத்தும் நோக்கில் இருக்கிறது. அல்லாஹ்வை அஞ்சிகொள்ளுங்கள்!

//கணவன் என்னவானான் என்று தெரியாத நிர்கதியாகிவிட்டவள் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாகவே தெரிகிறாள்.//

நிர்கதியாகிவிட்ட ஒரு பெண்ணை ஆட்டுகுட்டிக்கு ஒப்பாக்கிய ------ சகோதரர் ஜி.என் அவர்களையே சாரும்.

ஒரு பெண் தன்னுடன் வாழாத அல்லது அவளுக்கு பிடிக்காத கணவனை அது எந்த காரணமாக இருந்தாலும் சரி அவன் காணாமல் போயிருந்தாலும் உடனிருந்தாலும் அல்லது வேறு ஒருத்தியுடன் ஓடி விட்டாலும் சரி பிடிக்கவில்லை எனும்போது (கணவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் அப்பாவி மனைவிகளை தவிர ) அவள் மணவிலக்கு கோருவது அவளது உரிமையாகும் அதை யாரும் தடுக்கமுடியாது இதற்கு எந்த ஒப்பீடும் அவசியமில்லை.

From: நமக்குள் இஸ்லாம் Date: 2009/2/23
To:
fromgn@googlegroups.com

ஸலாம்.  அனபுச் சகோதரர் அபூபைஸல் அவர்களுக்கு
 
நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் ஆட்டுக் குட்டியுடன் அபலைப் பெண்ணை ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல என்பதில் அந்த ஒப்பிடு தவறென்றால் நம் கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்.  ஆனால் தொலைந்த கணவனுக்காக காத்திருக்கும் காலம் எவ்வளவு என்பதையும்,  மற்ற ஆதரவற்ற நிலையில் நிற்கும் பெண்ணின் வாழ்வியலையும் நாம் எவ்வாறு தீர்மானிப்பது என்பதை நேரடியான அல்லது நெருக்கமான துணை ஆதாரங்களுடன் விளக்குவதே சரியாகும்.
 
நாமறிந்தவரையில் (இது தவறென்றால் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கிறோம்) அந்த ஹதீஸை தி்க்கற்ற நிலையில் நிர்ப்பவை - நிர்ப்பவர்களுக்கான கால அவகாசம் மற்றும் பாதுகாப்பு குறித்த வழிகாட்டலாக கருதுகிறோம். 
 
தொலைந்த கணவனை - இறந்தவன் என்று முடிவெடுப்பதா?(நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிஞர் ஸாலிஹ் அல் உதைமீன் அவர்களின் பத்வா) பிரிந்தவன் என்று முடிவெடுப்பதா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இறந்தவன் என்று முடிவெடுத்தால் திரும்பி வரவாய்ப்பேயில்லை என்ற கருத்தை கொடுக்கும்.  அப்படி முடிவெடுத்த நிலையில் அவன் திரும்பி வந்தால், ஒருவேளை அவன் நெருக்கமான சொந்தததிலிருந்து கணவனாக வந்தவனாக இருந்தால்,  இறந்தவன் என்று முடிவெடுத்து பிரிந்த பெண் அவனை உயிருடன் பார்க்கும் போது அது எத்தகைய மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதையும் நாம் எணணிப் பார்க்க வேண்டும். இறந்தவன் என்று முடிவெடுப்பதை விட பிரிந்தவன் என்று முடிவெடுப்பதே  நமக்கு சரியாகப் படுகின்றது.
 
//ஒரு பெண் தன்னுடன் வாழாத அல்லது அவளுக்கு பிடிக்காத கணவனை அது எந்த காரணமாக இருந்தாலும் சரி அவன் காணாமல் போயிருந்தாலும் உடனிருந்தாலும் அல்லது வேறு ஒருத்தியுடன் ஓடி விட்டாலும் சரி பிடிக்கவில்லை எனும்போது (கணவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் அப்பாவி மனைவிகளை தவிர ) அவள் மணவிலக்கு கோருவது அவளது உரிமையாகும் அதை யாரும் தடுக்கமுடியாது இதற்கு எந்த ஒப்பீடும் அவசியமில்லை.// அபூ பைஸல்

கணவனிடமிருந்து விவாகரத்து பெறும் பெண்களைப் பற்றி இங்கு பிரச்சனையேயில்லை. அவன் பக்கத்திலிருநதாலும் பிடிக்கவில்லையென்றால் பிரிந்துக் கொள்ளலாம்.
 
கணவனைப் பிடிக்கவில்லை என்ற கேள்வி இங்கில்லை. ஓடிப் போனால் என்னசெய்வது என்பதே பிரச்சனை.
 
அவள் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? அதை தீர்மானிக்கும் ஆதாரம் என்ன? என்பவற்றிர்ககே விடைக்காணப்பட வேண்டும். (ஜஸாகல்லாஹு கைரன்)

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com