24 August 2009

அல்லாஹ்விற்கு உருவம்?


from: yoosuf lebbe bishrullah Date: 2009/8/2
To: fromgn@googlegroups.com


அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என தவ்ஹீத் சகோதரர்கள் கூறுவதாக எதிர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது பற்றி விளக்கவும்.

From: நமக்குள் இஸ்லாம் Date: 2009/8/4
To: fromgn@googlegroups.com


ஸலாம்.
 
ஒன்றுமே இல்லாத சூனியத்தை இஸ்லாம் வணங்க சொல்லவில்லை. உருவமற்ற சூனியத்திற்கு சூனியம் என்றுதான் பெயர் கொடுக்க முடியுமே தவிர அதற்கு இறைவன் என்று பெயர் கொடுக்க முடியாது.

இஸ்லாமிய இறைக் கோட்பாடு வெறும் சூனியக் கோட்பாடல்ல. இறைவன் உருவமற்றவன் என்று குர்ஆனிலோ நபி வழிகளிலோ எங்கும் சொல்லப்படவே இல்லை. மாறாக இறைவனுக்கு உருவம் இருக்கிறது என்பதற்கு இரண்டிலும் ஆதாரங்கள் இருக்கின்றன.

இறைவன் அனைத்தையும் கேட்பவன், அனைத்தையும் பார்ப்பவன், சூழ்ந்து அறிகின்றவன், ஞானம் மிக்கவன், ஆற்றல் மிக்கவன், அடக்கியாள்பவன், இயக்குபவன், என்றென்றும் நிலைத்து இருப்பவன், இப்படியே இறைவனைப்பற்றி ஏராளமான வசனங்கள் குர்ஆன் நெடுகிலும் ஏராளமாக இருக்கின்றன. வெறும் சூனியத்தை ஒன்றுமில்லாதவற்றை இப்படியெல்லாம் சொல்ல முடியாது.

இறைவன் தன்னைப் பற்றி கூறும் வசனங்களில் இதற்குரிய ஆதாரங்களை கொடுக்கிறான்.

யூதர்கள் இறைவன் விஷயத்தில் எவ்வளவோ மாறுபாடுகளை செய்துக் கொண்டே இருந்தார்கள். இன்றைக்கும் செய்கிறார்கள். நபி-ஸல்-வாழ்ந்த காலத்தில் இறைவனை கஞ்சனாக யூதர்கள் சித்தரித்துப் பேசினார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இறைவன் ஒரு வசனத்தை இறக்கினான்.

وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللّهِ مَغْلُولَةٌ غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُواْ بِمَا قَالُواْ بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَاء وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُم مَّا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَانًا وَكُفْرًا وَأَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاء إِلَى يَوْمِ الْقِيَامَةِ كُلَّمَا أَوْقَدُواْ نَارًا لِّلْحَرْبِ أَطْفَأَهَا اللّهُ وَيَسْعَوْنَ فِي الأَرْضِ فَسَادًا وَاللّهُ لاَ يُحِبُّ الْمُفْسِدِينَ
'அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது - என்று யூதர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கைகள் தான் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். மேலும் அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. அவன் நாடியவாறெல்லாம் செலவு செய்கிறான்.' (அல் குர்ஆன் 5:64)

இறைவன் தனக்கு இருக்கைகள் இருப்பதை தெளிவாக இங்கு குறிப்பிடுகிறான்.

وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
எல்லாமும் அழிந்து விடும் உம் இறைவனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும் என்றும் இறைவன் கூறுகிறான் (அல் குர்ஆன் 55:27)


அவனுக்கு முகம் உண்டு என்பதற்கு இந்த வசனத்தில் தெளிவான சான்று உள்ளது.
 
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
إِلَى رَبِّهَا نَاظِرَةٌ

இப்படி அவனுக்கு உருவம் உண்டு என்பதால் மறுமையில் நல்லவர்களால் சிரித்த முகத்துடன் இறைவனைப் பார்க்க முடியும்.(அல் குர்ஆன் 75:22.23)

மேக மூட்டமில்லா பவுர்ணமி இரவில் தடையின்றி சந்திரனை காண்பதுப் போல் உங்கள் இறைவனை மறுமையில் நீங்கள் காண்பீர்கள் என்று நபி-ஸல்- கூறியுள்ளார்கள்.(புகாரி, முஸ்லிம்)

உங்கள் கேள்விக்கு இந்த அளவு பதில் போதும் என்றாலும் இது பற்றி யாரும் குழப்பவோ விஷம பிரச்சாரம் செய்யவோ இடம் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் மேலும் சில விபரங்களையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

தனக்கு உருவம் உண்டு என்று சொன்ன இறைவன் அந்த உருவத்தை மனிதர்கள் யாரும் கற்பனை செய்யக் கூடாது என்று தடுத்து விட்டான் .
அதாவது இறைவனின் கை இப்படி இருக்கும், இறைவனின் கால் இப்படி இருக்கும், அவனது முகம் இது போன்று இருக்கும் என்று நாம் பார்த்த கேட்ட உணர்ந்த கற்பனை செய்த எது ஒன்றையும் அவனுக்கு உதாரணமாக்கக் கூடாது.
 

فَلاَ تَضْرِبُواْ لِلّهِ الأَمْثَالَ إِنَّ اللّهَ يَعْلَمُ وَأَنتُمْ لاَ تَعْلَمُونَ
அவனுக்கு உதாரணம் கூறாதீர்கள் ( அல் குர்ஆன் 16:74 )

 
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ
அவனைப் போன்று எப் பொருளும் இல்லை (அல் குர்ஆன் 42:11)
 
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

அவனுக்கு நிகராக எது ஒன்றுமில்லை (அல் குர்ஆன் 112:4)

இறைவனின் படைப்பினங்களை அவனுக்கு மாடலாக்குவது பாவமான செயல் என்று இறைவன் கூறுவதால் அத்தகைய காரியங்களிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும்.
 
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com   

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

http://geeyen1.googlepages.com/ekalappai20b_bamini.exe   

----------
From: Ansari Thameem Date: 2009/8/5
To: fromgn@googlegroups.com


பிஸ்மில்லாஹ்!
அனைவருக்கும் எனது ஸலாம் வ அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு! 

அல்லாஹு அக்பர்! மாஷா அல்லாஹ்! நல்ல விளக்கம்! அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியிலேயே செலுத்துவனாக! ஆமீன்!
 
மிகவும் அற்புதமான விளக்கம் புனிதத்திருக் குர்ஆன் வசனங்களுடன்
 
வஸ்ஸலாம்
தஞ்சை தமீம் அன்சாரி